"

Friday, December 21, 2018

வரலாற்றில் இன்று டிசம்பர் 21 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று டிசம்பர் 21 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.

நிகழ்வுகள்
69 – வெஸ்பசியான் ரோமப் பேரரசின் ஒரே ஆண்டில் 4வது பேரரசனாக முடிசூடினான்.
1768 இல் நேபாளம் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு இன்றுவரையுள்ள நாடு தோற்றுவிக்கப்பட்டது.
1902 – இலங்கையில் போவர் போர்க் கைதிகளாக இருந்தவர்கள் தென்னாபிரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
1913 – உலகின் முதலாவது குறுக்கெழுத்துப் போட்டி “நியூயோர்க் வேர்ல்ட்” பத்திரிகையில் வெளியானது.
1967 – உலகின் முதலாவது இருதயமாற்றுச் சிகிச்சை பெற்ற தென்னாபிரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் நாஷ்கான்ஸ்கி சிகிச்சை பெற்று 18 நாட்களின் பின்னர் இறந்தார்.
1968 – சந்திரனுக்கான மனிதனை ஏற்றிச் சென்ற விண்கலம் அப்பல்லோ 8 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. புவியீர்ப்பைத் தாண்டிச் சென்ற முதலாவது மனித விண்கலம் இதுவாகும்.
1971 – ஐநா அவையின் பொதுச் செயலாராக கூர்ட் வால்ட்ஹெயிம் தெரிவானார்.
1973 – அரபு-இஸ்ரேல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஜெனீவா மாநாடு ஆரம்பமானது.
1979 – ரொடீசியாவின் விடுதலைக்கான உடன்பாடு லண்டனில் கைச்சாத்திடப்பட்டது.
1988 – ஸ்கொட்லாந்தில் லொக்கர்பி என்ற இடத்தில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க விமானத்தில் குண்டு வெடித்ததில் 270 பேர் கொல்லப்பட்டனர்.
1991 – கசக்ஸ்தானின் அல்மா-ஆட்டா நகரில் கூடிய பதினொரு சோவியத் குடியரசுகளின் தலைவர்கள் தனிநாடுகளின் பொதுநலவாய அமைப்பு உருவாகியவுடன் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும் என அறிவித்தனர். இதன்படி டிசம்பர் 26 ஆம் நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
1992 – டச்சு விமானம் ஒன்று போர்த்துக்கலில் வீழ்ந்ததில் 56 பேர் கொல்லப்பட்டனர்.
1995 – பெத்லகேம் நகரம் இஸ்ரேலியர்களிடம் இருந்து பாலஸ்தீனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
2007 – பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
1932 – யூ. ஆர். அனந்தமூர்த்தி, கன்னட எழுத்தாளர் (இ. 2014)
1942 – ஹூ சிங்தாவ், சீன மக்கள் குடியரசின் தலைவர்
1948 – சாமுவேல் ஜாக்சன், அமெரிக்க திரைப்பட நடிகர்
1963 – கோவிந்தா, இந்திய நடிகர்
இறப்புகள்
2006 – வரதர், ஈழத்தின் மறுமலர்ச்சி எழுத்தாளர் (பி. 1924)
2008 – கே. இந்திரகுமார், ஈழத்து எழுத்தாளர், நடிகர்

No comments:

Post a Comment

Adbox