"

Thursday, January 31, 2019

டிராய் அதிரடி. 100சேனல்களுக்கு இனி ரூ.155 மட்டும்...!



டிராய் அமைப்பு கொண்டுவந்துள்ள இந்த புதிய விதிமுறைகள் வரும் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கேபிள் மற்றம் ஒளிபரப்பு சேவைகளுக்கான புதிய விதிமுறைகளையும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. 




முன்பு வாடிக்கையாளர்களுக்கு விரும்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மாதம் ஒரு தொகுப்பான கட்டணத்தை டிடிஎச் சேவைக்கு செலுத்தி வந்திருப்பார்கள், பின்பு பார்க்க விருப்பம் இல்லாத மற்றும் மொழிபுரியாத சேனல்களும் இருந்திருக்ககும், இனிமேல் அவ்வாறு பார்க்க தேவையில்லை, வாடிக்கையாளர்கள் எந்த சேனலை பார்க்க விரும்புகிறார்களோ அந்த சேனலைத் தேர்வு செய்து அதற்குரிய மாதாந்திரக் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.


டிவியை ஆன் செய்ததுமே எக்கச்சக்கமா டிவி சேனல்கள் கொட்டிக்கிடக்கும். தமிழில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான சேனல்கள் இருக்கின்றன. அனைத்துமே விருப்பமான சேனல்கள் என்றால் கேள்விக் குறிதான். தேவைப்படாத சில சேனல்களுக்கு சேர்த்து வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தி வருகிறார்கள். பேக்கேஜ் அடிப்படையில் டிடிஎச் நிறுவனங்களும் சேனல்களை திணிக்கின்றன. இந்த நடைமுறையை தடுக்கும் வகையில் மத்திய தொலைத்தொடர்பு நிறுவனமான டிராய் புதிய விதிகளை வகுத்துள்ளது. ஆதாவது விரும்பிய சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தி பார்ப்பது.


விரும்பிய சேனல்களை பார்க்க குறைந்தபட்ச அடிப்படை கட்டணமாக, வரிகள் சேர்த்து 153 ரூபாய் 40 காசுகள் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தில் 100 சேனல்களை பார்க்கலாம். இந்த 100 சேனல்கள் இலவச சேனல்களாகவோ, கட்டண சேனல்களாகவோ இருக்கலாம். எச்டி சேனல்களை தேர்ந்தெடுக்க முடியாது. பொதுத்துறை நிறுவனமான தூர்தர்ஷனின் 25 சேனல்கள் இந்த பட்டியலில் கட்டாயமாக வரும். மீதமுள்ள 75 சேனல்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். 100 சேனல்களுக்கு மேல் தேர்வு செய்தால் கூடுதலாக சேவை கட்டணம் வசூலிக்கப்படும். 

No comments:

Post a Comment

Adbox