"

Tuesday, August 7, 2018

தமிழினத்தின் தன்னிகரில்லா தலைவர் முன்னாள் முதல்வர் டாக்டர் மு.கருணாநிதி காலமானார்


திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாலை 6.10 மணிக்கு தற்போது அவர் காலமானார். அதிகாரப்பூர்வமாக அவர் உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்நிலையில் கலைஞருக்கு மெரீனாவில் இடம் ஒதுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தார். அண்ணா நினைவகத்தின் அருகே கலைஞரை அடக்கம் செய்ய தார்மீக உரிமை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். தேசிய தலைவராக கருதப்படும் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும் என கேட்டுள்ளார். 


இதனையடுத்து, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெரினாவைத் தவிர வேறு இடம் ஒதுக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைக் கழகம் எதிரே உள்ள காந்தி மண்டபம் அருகே கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க தயார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மெரினாவில் இடம் ஒதுக்குவது தொடர்பாக நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதால் இடம் அளிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திமுக தலைவர் மு. கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க மறுத்த தமிழக அரசுக்கு எதிராக, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் திமுக மனு கொடுத்துள்ளது.இந்த மனுவை இன்று இரவு 10.30 மணிக்கு தலைமை நீதிபதி விசாரிக்கிறார்.

No comments:

Post a Comment

Adbox