"

Sunday, August 5, 2018

வாய்ப்புண் ஏன் ஏற்படுகிறது? அதனை சரி செய்வதற்கான வீட்டு வைத்திய குறிப்புகள்



நம்மில் பலருக்கு அடிக்கடி உதட்டின் ஓரம் அல்லது வாயினுள் சிறிய சிவப்பு நிறத்தில் குமிழ் போன்ற வட்ட வடிவில் வலியுடன் கூடிய புண் ஏற்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம் வயிற்றினுள் ஏற்படும் பாதிப்பின் அறிகுறியே இந்த வாய் புண். வயிற்றின் இரைப்பையில் அதிக வெப்பம், அதிகளவு அமிலம் சிறப்பு, அதிகமான கார உணவுகளை எடுத்துக்கொள்வது மற்றும் மசாலா பொருட்களை உட்கொள்வது, காலதாமதமாக உணவினை எடுத்துக் கொள்வது போன்றவையே இரைப்பையில் ஏற்படும் பாதிப்பு. இந்த பாதிப்பின் காரணமாக நம் உதடுகளில் அல்லது வாயினுள் புண் ஏற்படுகிறது.


இந்தப் புண் சரி செய்ய முதலில் நேரத்திற்கு உணவினை எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் காரமான மற்றும் மசாலா அதிகமாக உள்ள பொருட்களை தவிர்த்தல் நலம். உடல் வெப்பத்தை எப்போதும் சமநிலையில் பேணிக்காப்பது போன்றவை அவசியமானது.

சரி இப்பொழுது வாய்ப்புண் ஏற்பட்டுவிட்டால் அதனை குணப்படுத்த சில வீட்டு முறை மருத்துவ குறிப்புகள். முதலாவதாக வெந்தியத்தை சிறிதளவு நீரில் ஊறவைத்து பின்னர் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை வெந்தயத்துடன் குடித்து வந்தால் சில நாட்களில் குணமாகும். மணத்தக்காளி கீரை உணவுடன் எடுத்துக்கொண்டாலும் சில நாட்களில் வாய்ப்புண் குணமாகும். இந்த மணத்தக்காளி குழம்பாகவும் பொரியலாகவும் எடுத்துக்கொள்ளலாம். விரும்பினால் வெறும் வாயில் இந்த கீரையினை உட்கொள்ளலாம்.

அடுத்ததாக சிறிதளவு பச்சை அரிசி, கசகசா, பாதாம் கொட்டை ஆகியவற்றை நீரில் சில மணி நேரம் ஊறவைத்து, அதனை மிக்ஸியில் தேங்காய் உடன் அரைத்து எடுத்து தேவையான அளவு சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து கொதிக்கவைத்து அதனுடன் போதுமான அளவு பால் சேர்த்து கஞ்சியினை தயாரிக்கவும். உருவான இந்த பாதாம் கசகசா கஞ்சியினை மூன்று வேளை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் எளிதில் வாய் புண் குணமடைந்து விடும். மேலும் இது வயிற்று எரிச்சலை குணப்படுத்தும் தன்மை உடையது.

No comments:

Post a Comment

Adbox