கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேஸ்புக் அக்கவுண்டில் தனிநபர் தகவல்கள் திருடப்படுவதாக பிரபல நிறுவனம் தகவல் வெளியிட்டதை அடுத்து பேஸ்புக் பயனர்கள் அனைவரும் தங்களுடைய தகவல்கள் ஏதேனும் திருடப்பட்ட இருக்குமோ என்ற அச்சத்துடன் இருந்து வருகின்றன. இந்நிலையில் நாம் பிரபலமாக அனைவராலும் பயன்படுத்தப்படும் கூகுள் அக்கவுன்டில் உள்ள நம்முடைய தனிநபர் தகவல்கள் மற்றும் gmail இல் உள்ள தகவல்கள் பிறரால் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்ற சந்தேகம் நம்மிடையே எழுவது உண்மையே. இந்த நிலையில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜிமெயில் அக்கவுண்டில் உள்ள தகவல்கள் சில மூன்றாம் தரப்பு டெவலப்பர்கலால் செய்திகள் மற்றும் தகவல்கள் வியாபார நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.
ஜிமெயில் வாடிக்கையாளர்கள் அவர்களுடைய gmail ஐடியை பல்வேறு சேவைகளுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். முக்கியமாக வங்கி கணக்கு, ஆதார் ஐடி, சிம் கார்டு சேவைகள் மற்றும் பல இணையதள சேவைகளுக்காகவும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் நம்முடைய ஜிமெயில் கணக்கு அது பாதுகாப்பாக உள்ளதா என்ன ஆராய்வது மிக அவசியமானது. இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் இல் உள்ள செயலிகளை பயன்படுத்த நம்முடைய கூகுள் கணக்கை மூன்றாம் தரப்பு டெவலப்பர்கள் இடையே இடையே நாம் பயன்படுத்தி வருகிறோம். அவ்வாறு பயன்படுத்தும் போது அந்த செயலி நம்முடைய google account பயன்படுத்தி தனிநபர் தகவல்களை பகிர்வதற்கு வாய்ப்பளிக்கிறது.
இதனை கண்டறிய
1.உங்கள் ஜிமெயில் அக்கவுன்ட்டை login செய்ய வேண்டும்.
2. பின்னர் வலது புறம் மேல் பக்கத்தில் உள்ள வட்டமான லோகோவை க்ளிக் செய்யும் பொழுது அது உங்களை செட்டிங் கொண்டு செல்லும்.
3. அங்கு sign in and செக்யூரிட்டி பகுதியை கிளிக் செய்யும்போது, app with அக்கவுண்ட்அக்சஸ் என்ற பகுதியை click செய்ய வேண்டும்.
4. அங்கு manage app என்ற பகுதி காணப்படும், அதை தேர்வு செய்யும் பொழுது தாங்கள் ஏதாவது மூன்றாம் நபர் செயலி தங்களுடைய google account பயன்படுத்த அனுமதித்திருந்தால் அதை நீக்கி கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுடைய gmail கணக்கு பாதுகாப்பு தன்மையை உறுதி செய்து கொள்ள முடியும்.
வீடியோவில் காண
CLICK
வீடியோவில் காண
CLICK
No comments:
Post a Comment