"

Tuesday, July 3, 2018

திருப்பதி கோவில் : பிரசாத அடுப்புக்கு அடியில் "புதையல்"..! வெளிவந்த அதிர்ச்சி தகவல்...!



திருப்பதி எழுமலையான் கோவிலை பற்றி அடுத்தடுத்த சர்ச்சை வந்துக்கொண்டே இருக்கிறது. இது பற்றி மற்றவர்கள் சொன்னால் கூட, நம்ப முடியாமல் இருக்கலாம் ஆனால் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலுஅவர்களே இது பற்றி கூறுகிறார்...

இது குறித்து பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ரமணதீத்சிதலுபல்வேறு கேள்விகளுக்கு அதிரடி விளக்கம் அளித்து உள்ளார்.

கண்ணதாசன் மீது அதீத காதல் கொண்டவர் .....

தமிழில் மிக அழகாகபேசும் ரமண தீட்சித்தலுஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும்தமிழில் மிகவும் அழகாக பேசுகிறார். அதற்கான காரணம் அவர்கண்ணதாசன் மீது கொண்டு இருந்த அளவற்ற அன்பு தானாம்.. அவருக்காகவேதமிழில் பேசவும்எழுதவும் கற்றுக் கொண்டாராம்.

விஐபிக்கள் வந்தால் ஏழுமலையானுக்கு அவசர அவசரமாக பூஜைசெய்ய வேண்டும்...!

திருப்பதிக்குவிஐபி க்கள் வந்தால் போதும், கடவுளுக்கு கூடபூஜைகள் வேகமாக செய்யவேண்டிய நிலைக்குதள்ளப்படுவார்கள். அதிகாரிகள்இடும் கட்டளைக்குஅர்ச்சகர் அடிபணிந்துஆக வேண்டும்...

விஐபி க்கள் வந்தால் எல்லோருக்குமே தரிசனம் கிடைக்கும்.. அதாவது ஏழுமலையான் தரிசனம் அல்ல ...விஐபிக்கள்தரிசனம் ....

அதிகாரிகளுக்கும்ஒரு சிலஊழியர்களுக்கும் விஐபிக்களிடமிருந்துகவனிப்பு பலமாக இருப்பதால் தான், உடனேஏழுமலையானைவழிபட வழிவகை செய்வார்கள்.....சாதாரணமக்கள்நிலை..?

சாதாரணமக்கள் 1 நொடிகூட நின்றுஏழுமலையானை தரிசனம்செய்ய முடியாது. அவ்வாறுஏழை மக்கள்நின்று வழிபடும்அளவிற்குநேரம் கொடுத்தால் அதனால்என்ன பயன் உண்டு ..? இதுவேவிஐபிக்கள்என்றால்காசுகிடைக்கிறது அல்லவா ...?

இதை எல்லாம்சொல்லிக்கொண்டேபோகலாம் ...ஆனால் மன வேதனையும் வருத்தமும் தான் மிஞ்சும் எனமிகவும்வருத்தத்துடனும் வேதனையுடனும் கூறி உள்ளார் ரமண தீட்சித்



யார்அந்தவிஐபிக்கள் என்ற கேள்விக்கு .....

யாரெல்லாம்அதிக பணம்கொடுக்கதயாராகாஉள்ளார்களோஅவர்கள்தான்விஐபிக்கள் எனதெரிவித்து உள்ளார்ரமணதீட்சித்

அதிகம் பணம் கொடுத்தால் அவர்கள் தான் விஐபிக்கள்... பணம், பதவி, புகழ், அதிகாரம் மட்டும் இருந்தால் போதும், அவர்கள் நேராக சென்று ஏழுமலையானை தரிசனம்செய்துக் கொள்ளலாம்.

தங்க ஆபரணங்கள் பற்றிகேட்டபோது....

ஆபரணங்களை கொடுக்க முன் வரும் தனவந்தவர்களிடம் , பெருமாளுக்கு இது வேண்டும் அது வேண்டும் என்பார்கள்....அவர்களும் சரிநாங்கள் கொண்டு வருகிறோம்என சொன்னால்...பெருமாளுக்கு எது போன்ற நகை வேண்டும்... எந்த அளவில் வேண்டும் என்பது முழுதும் நாங்கள் சொல்லும் ஜூவல்லர்ஸ்களிடம் கொடுங்கள் .. அவர்கள் தான் சரியாக செய்வார்கள்.. அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்எதுசரியாக இருக்கும் ...எத்தனை கிலோ நகை வேண்டும் என்று”....இவ்வாறுதெரிவிக்கும் போது, அங்கேயேஊழல்நடக்கிறது என்பதைதெளிவாகபுரித்துக்கொள்ள முடியும்...



ஏனென்றால் இவர்களுக்குள் ஒருபுரிந்துணர்வுஇருக்கும்...அதனால் தான் கடந்த 9 ஆண்டுகளாகவே அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரும் அங்கேயேபணிபுரிந்து வருகிறார்.

ஒரு சில ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னும் அங்கேயே மீண்டும் எக்ஸ்டென்ஷன் என்ற பெயரில்அங்கேயே இதுபோன்ற வேலை செய்துவருகிறார்கள்

இதனால் தான் நான்சிபிஐ விசாரணை வேண்டும் எனதொடர்ந்து போராடி வருகிறேன் என தெரிவித்து உள்ளார் ரமண தீட்சித்

நகை விவரம்...!

1974 ஆம் ஆண்டு முதல் அர்ச்சகராக இருக்கும் நான், என்னுடைய அனுபவத்தின் படி 1996 ஆம்ஆண்டே – 500 கிலோ தங்க நகைகள்இருந்தது ...இன்றையநிலவரப்படி1000 கிலோதங்கத்தையும் தாண்டிஇருக்கும்

மைசூர் மகாராஜா கொடுத்த நெக்லஸ்....

மைசூர் மகாராஜா கொடுத்த நெக்லசில் ரோஜா நிறம் வைரம் இருந்தது.2001 இல்,பக்தர் ஒருவர் வீசிய நாணயத்தால் வைரம் உடைந்துவிட்டதாக ரெக்கார்ட் செய்து உள்ளனர். பின்னர் அது காணாமால் போய்விட்டது

அதற்கு பின், 2011 – ஜெனிவாவில் ஒரு வைரம் மிக பெரிய தொகைக்குஏலம் போனது....அந்தவைரம் கோல்கொண்டா வைர சுரங்கத்தில் இருந்துஎடுக்கப்பட்டது என அதில் குறித்துவைக்கப்படிருந்தது. இந்தவைரம் நவாப்களிடமிருந்துதிப்பு சுல்தான் மூலம் மைசூர் மகாராஜா விற்குவந்ததாகநாங்கள்படித்து உள்ளோம்.

இந்தவைரத்தைதான்மைசூர்மாகாராஜாதிருப்பதி ஏழுமலையானுக்கு பரிசாககொடுத்துஇருந்தார். அந்த வைரம் தான் இப்போது காணாமல்போய்விட்டது....அந்தவைரமும் ஜெனிவாவில்ஏலம் விடப்பட்ட வைரமும்ஒத்துப்போவதால் தான்சிபிஐ விசாரணை வேண்டும் எனகேட்கிறேன் எனரமண தீட்சித் தெரிவித்து உள்ளார்

9 வருடமாகஒரே இடத்தில்ஒரு ஐஏஎஸ் அதிகாரி இருப்பது எப்படி..?

9 வருடமாக ஒரே ஒரு அதிகாரி மற்றும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஒரேஇடத்தில் இருப்பது எப்படிசாத்தியம்..?

தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருக்கும் போது....இதே போன்று நடைபெறுவது வழக்கமாக வைத்து உள்ளனர் என்பதை தெளிவாகபுரித்துக் கொள்ள முடியும்...ஏனென்றால் இவர்கள் மூலம் தான்எல்லாஊழலும் நடைபெறுகிறதுஎன்றுபோட்டுஉடைத்தார்ரமண தீட்சித்.

பிரசாத அடுப்புக்கு அடியில் புதையல்...ரகசியத்தை போட்டு உடைத்த தலைமை அரச்சகர்ரமண தீட்சதலு

திருப்தியில் இரண்டுபிரகாரங்கள் உள்ளது

உள் பிரகாரம் – அன்ன பிரசாதம் செய்யும் இடம். சர்க்கரை பொங்கல்,வெண்பொங்கல் (பெருமாளுக்கு )

வெளி பிரகாரம் – லட்டு வட தோசை அப்பம் செய்யும் இடம்

உள்பிரகாரம் டிசம்பர் 8 மூடப்பட்டது – இது எனக்கே தெரியாது....அப்போதும் பிரதான அரச்சகர் நான் தான்..எனக்கு கூடதெரியாமல் பிரகாரம் மூடப்பட்டது. அதற்கு பதிலாக வேறு இடத்தில் பிரகாரம் கட்டப்பட்டது. இது ஆகம சாத்திரம் படி ஒத்துவராது

ஏற்கனவே இருந்தபிரகாரம் 1015 ஆம் ஆண்டிற்கு முன்னதாகவே கட்டப்பட்டது. அதாவது 1000 வருடத்தையும் தாண்டிவிட்டது..இந்நிலையில்இந்த பிரகாரத்தைமூட வேண்டிய அவசியம்இல்லை....

மூடிய பின்னர் சில நாட்கள் கழித்து, அந்த இடத்தில்உடைக்கப்பட்டுஇருந்தது.அப்போது தான் எனக்கு சந்தேகம்வலுக்க தொடங்கியது

அடுப்புக்கு அடியில் புதையல்

புக் – சவால் ஜவாப் பட்டி என்ற புத்தகமானது, நார்த் ஆற்காடு பிரிட்டிஷ் கலக்டர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட திருப்பதி எழுமலையான்ஆராய்ச்சி பற்றியமுழு விவரம் அடங்கியது

1800ஆம்வருடம் திருமலை கோவிலை பற்றி ஆரய்ச்சி மேற்கொண்டஇவர் அனைத்துவிவரத்தையும்எழுதியுள்ளார்.

அதில்சோழமற்றும் பல்லவ மன்னர்களும் பிரதாப்ருத்ரர் பேரரசரால் வழங்கப்பட்ட தங்க காசுகள் தங்க நகைகள், வைடூரியங்கள் இவற்றையெல்லாம் பாதுகாப்பாகவைக்க வேண்டும் என்பதற்காக பக்தர்கள் காலடி படாத இடமாக பார்த்து பிரகாரம்அடியில் வைக்கப்பட்டுஇருந்ததாகஎழுதப்பட்டு உள்ளது

100 க்கு 50 அடி

இந்த நகைகளைபாதுகாப்பாக வைக்கப்பட்டஇடம் தான் உள்பிரகாரம். இதனை தான் சமீபத்தில்மூடப்பட்டது.

பின்னர்அந்தஇடத்தில்உடைக்கப்பட்டும் உள்ளது. இதனை பார்த்தபின் எனக்குமிகவும் சந்தேகம் வலுத்துள்ளது. இது தொடர்பாக கண்டிப்பாக சிபிஐ விசாரணை வேண்டும். அப்போது தான் உண்மை வெளிவரும் எனதலைமை அர்ச்சகர்ரமண தீத்சித்தலு தெரிவித்துஉள்ளார்.

Source
Asianet Tamil News

No comments:

Post a Comment

Adbox