பிளஸ் 2 விடைத்தாளில் தவறாக மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் 1,000 பேருக்கு,நோட்டீஸ் அனுப்ப, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் தேர்வு நடைபெற்று மே 16 இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் 2,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர்.
அதில் 1,000 மாணவர்களின் விடைத்தாளில், கூட்டல் மற்றும் மதிப்பீடு பிழைகளால், மதிப்பெண் மாறியது. இந்த விடைத்தாள்களை திருத்திய ஆசிரியர்கள், சரிபார்த்த விடை திருத்தும் மைய தலைமை அதிகாரிகள் என பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலின்படி ஆசிரியர்கள் உள்ளிட்ட 1,000 பேருக்கு, நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.விளக்கத்துக்கு சரியான பதில் அளிப்பவர்களை தவிர, மற்றவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment