"

Monday, July 23, 2018

நீங்கள் அடிக்கடி தலைவலியால் பாதிக்கப்படுகிறார்களா ? மிக எளிய முறையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு குணப்படுத்தலாம்.



நீங்கள் அடிக்கடி தலைவலியால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் முக்கியமான சில காரணங்களே, சிலருக்கு தலைவலி ஒற்றைத் தலைவலி அல்லது தலை முழுவதுமாக வலியால் நீண்ட நாட்களுக்கு அவதியுறுகின்றனர். பொதுவாக தலைவலி நம் உடலில் ஏற்படும் பாதிப்பின் வெளிப்பாடு நீண்ட நேர பயணங்கள் தலைவலியை ஏற்படுத்தும். அதேபோல் நம் உடலில் செரிமானம் நடைபெறுவது ஏதேனும் பாதிப்பு இருந்தால் தலைவலி இருக்கும். உடலில் ரத்த அழுத்தம் மாறுபடும்பொழுது தலைவலி ஏற்பட காரணமாகிறது. அதேபோல் மனதளவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் தலைவலி ஒரு காரணமாகிறது. மூளையில் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் அல்லது வேறு ஏதாவது பாதிப்புகள் இருந்தாலும் தலைவலி ஏற்பட காரணமாகிறது. 


இந்த தலைவலியை நாம் மிக எளிமையாக கட்டுப்படுத்தலாம், அதுவும் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு எளிமையான கஷாயத்தை தயாரித்து குணப்படுத்தலாம். உணவே மருந்து... மருந்தே உணவு. இந்த முறையில் வீட்டில் உள்ள பொருட்களான திப்பிலி, வெள்ளை மிளகு, சுக்கு, அதிமதுரம் மற்றும் தனியாவை கொண்டு எளிமையான மருந்தை எவ்வாறு தயாரிப்பது என்பதை பார்ப்போம். 

முதலில் கட்டை விரல் அளவு சுக்கு மற்றும் அதிமதுரம் எடுத்துக்கொள்ள வேண்டும். வெள்ளை மிளகு திப்பிலி இரண்டும் ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். இதனுடன் இரண்டு ஸ்பூன் தனியாவை சேர்த்து மிக்ஸியில் அரைத்து அல்லது இடித்து எடுத்துக் கொள்ளவும். இந்தப் பவுடரில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து 200 ml தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்கவும். பின்னர் அதில் போதுமான அளவு பணம் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு கலந்து இந்த கஷாயத்தை தயாரிக்கலாம். இந்த கஷ்டத்தை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வரும்பொழுது எப்படிப்பட்ட தலைவலி ஆகினும் அவற்றை குணப்படுத்தலாம்.

No comments:

Post a Comment

Adbox