lumi watch என அழைக்கப்படும் ஒரு சாதனத்தை அறிமுகம் செய்துள்ளனர் பல்கலைக்கழக சேர்ந்த ஆராய்சியாளர்கள். மேலும் இந்த ஆராய்சியாளர்கள் உருவாக்கிய ஸ்மார்ட்வாட்ச்-ல் சிறிய ரக புரஜெக்டர் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது, குறிப்பாக அந்த புரஜெக்டர் காட்சிகளை கையின் மீது உருவாக்கக்கூடியதாக இருக்கின்றது.
அதன்பின்பு கையினையே தொடுதிரையாக செயல்படுத்தக்கூடி அம்சம் அந்த ஸ்மார்ட்வாட்ச்-ல் இருக்கின்றது என ஆராய்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கண்டிப்பாக உலக சந்தைகளில் இந்த ஸ்மார்ட் வாட்ச் மிகப் பெரியவெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச்-ல் இருக்கும் புரஜெக்டர் உடன் ஒரு சென்சார் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
இது உடலை தொடுதிரையாக மாற்றக் கூடிய தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது என ஆராய்சியாளர்கள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் ஆராய்சியாளர்கள் அறிமுகம் செய்துள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது ஆண்ட்ராய்டு 5.1 இயங்குளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் மற்றும் வைஃபை போன்ற பல்வேறு வசதிகளையும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் வாட்ச், அதன்பின்பு கண்டிப்பாக சிறியவர்கள முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் lumiwatch வெளிவரும் எனக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment