மருத்துவம் பொறியியல் மற்றும் பட்ட மேற்படிப்பு பயில கல்விக்கடன் வேண்டி இனி மாணவர்கள் வங்கிகளில் காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கு பதிலாக கல்விக்கடனுக்காகவே ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
இதனால் இனி ஏழை மாணவ மாணவிகள் தங்களுடைய மேல் படிப்புக்காக கல்விக் கடன் வேண்டி வங்கிகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த இணையதளத்தில் சென்று சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும் தாங்கள் விரும்பும் பட்டமேற்படிப்பு பற்றிய தகவல்களை பதிவு செய்து அதன் மூலமாக வங்கி கடன் பெறலாம் .
“ ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ https://www.vidyalakshmi.co.in/Students என்ற இணையதளத்தின் மூலம் அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. எனவே மாணவர்கள் மிக எளிமையாக வங்கிக் கடனைப் பெறலாம்.
No comments:
Post a Comment