அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.
இதனை மீறி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பெயரில் பள்ளி வளர்ச்சி நிதி என்ற கட்டணம் வசூலித்தால் அந்த அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆங்கில வழி கல்விக்கு மட்டும் 6 முதல் 8 வரை 200 ரூபாய் 9 மற்றும் 10 வகுப்புகளுக்கு 250 ரூபாய் எனக்கு 11மற்றும் 12 வகுப்புகளுக்கு ரூபாய் 500 கட்டணமாக வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதையும் மீறி எந்த பள்ளிகளிலாவது கட்டண வேட்டையில் ஈடுபட்டால் பள்ளியின் மீது நிர்வாகத்தின் மீது போலீஸில் புகார் அளிக்கலாம் மேலும் பள்ளி கல்வித்துறையில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment