"

Tuesday, April 10, 2018

வாட்ஸ் ஆப் கணக்கில் சிம் இல்லாத நம்பரை பயன்படுத்துவது எப்படி?


வாட்ஸ் ஆப் செயலியில் பொதுவாக சிம் எண் கொண்டுதான் நாம் வாட்ஸ் ஆஃப் அக்கௌன்ட்டை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் சிம் இல்லாத நம்பரை கொண்டும் பயன்படுத்த முடியும். பிளே ஸ்டார்ல் உள்ள  2ndLine செயலி மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் சிம் கார்டு இல்லாமல் வாட்ஸ்ஆப் உபயோகம் செய்ய முடியும். 

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் பிளே ஸ்டோர் வழியே 2ndLine-எனும் செயலியை பதிவிறக்கம் செய்து,இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

பின்னர் செயலியை திறந்து இ-மெயில் முகவரி, பாஸ்வேர்ட் பயன்படுத்தி ஒரு அக்கௌன்ட் ஓபன் செய்ய வேண்டும். அதன்பின்பு இந்த 2ndLine-செயலியில் உங்கள் நாட்டின்  குறியீடுக்கு பதில் , அதாவது  இந்தியாவின் குறியீடு கொடுக்கமால் யூஎஸ் அல்லது வேறு நாட்டு  குறியீடு பயன்படுத்த வேண்டும். உதாரணமாக யூ ஸ்குறியீடு '513' என்பதை தேர்வுசெய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

செயலியில் குறிப்பிட்ட போன் நம்பர் கொடுக்கப்படும், அதில் உங்களுக்கு தேவையான நம்பரை தேர்வுசெய்யது.அந்த எண்ஐ பதிவு  செய்து வாட்ஸ் ஆப்ஐ பயன்படுத்த முடியும். வாட்ஸ்ஆப் உபயோகம் செய்யும் போது கால் அழைப்புகளை தவிர்க்கவும், ஏனெனில் கால் அழைப்புகளை மேற்க்கொள்ளும் போது கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.


No comments:

Post a Comment

Adbox