"

Tuesday, April 24, 2018

தமிழிலும் ரயில் டிக்கெட் மகிழ்ச்சியில் மக்கள்


அந்தந்த மாநில மொழிகளில் ரெயில் டிக்கெட் வழங்கும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒரு காலத்தில் புறநகர் ரயில் டிக்கெட்டாக இருந்தாலும் சரி, முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டாக இருந்தாலும் சரி தமிழில் அச்சாகி இருக்கும். இந்த வழக்கம் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டது.

இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தான் பயண விவரங்கள் இருக்கும். தமிழ் மொழியில் இருக்காது. எனவே தமிழ் மொழி மட்டுமே தெரிந்தவர்களால் அதில் இருக்கும் விவரத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியாது. கேட்டப்படி தான் டிக்கெட் கொடுத்துள்ளார்களா..? என்பதை கூட அவர்களால் கண்டுபிடிக்க முடியாது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் வழங்கப்படும் டிக்கெட்டுகளில் தமிழ் மொழியும் இன்று முதல் இடம்பெறுகிறது. தற்போது சோதனை முயற்சியாக ஒரு சில ரயில் நிலையங்களில் அமலுக்கு வந்துள்ள இந்த திட்டம் விரைவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட்டுகளில் மட்டுமே இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட்டுகளில் தமிழ் மொழியும் இடம்பெற்றதை கண்ட ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Adbox