நாட்டின் சாலைகள் பராமரிப்புக்காக பயன்படுத்தும் மக்களிடமே தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.. எவ்வளவு தூரம் போனாலும் சுங்க சாவடியை தாண்டினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை கட்ட வேண்டிய கட்டாயம் உள்ளது.
இனிமேல் பயணம் செய்யும் தூரத்துக்கு மட்டும் சுங்கக்கட்டணம் செலுத்தும் நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வாகனங்களில் சுற்றுலா மற்றும் வெளியூர் செல்பவர்கள் அந்தந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தி செல்கின்றனர்.
இந்நிலையில் ஜியோ பென்சிங் தொழில்நுட்ப உதவியுடன் வாகனங்கள் செல்லும் தொலைவு கணக்கிடப்பட்டு, அந்த சாலையை வாகனங்கள் எவ்வளவு தூரம் பயன்படுத்துகின்றன என கணக்கிட்டு அதற்கேற்ப சுங்க கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக டெல்லி - மும்பை நெடுஞ்சாலையில் பரிசோதனை முயற்சியாக சில வாரங்களில் அமல்படுத்தவும், பின்பு நாடு முழுவதும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment