"

Tuesday, April 24, 2018

ஏடிஎம்மில் திருட்டு சளைக்காத தொழில் நுட்ப முயற்சியில் கொள்ளையர்கள்


புதுச்சேரியில் நடந்த தொடர் ஏடிஎம் கொள்ளையில் தற்போது நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களாக புதுச்சேரியில் பிரபல வங்கி கிளைகளின் ஏடிஎம்களில் பணம் எடுப்பவர்களின் கணக்கில் இருந்து பணம் கொஞ்சம் கொஞ்சமாக மாயமாகி வந்தது. அவர்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்காமலே பணம் எடுத்ததாக குறுஞ்சேதி சென்று இருக்கிறது. 5 லட்சத்திற்கும் அதிகமாக இப்படி பணம் திருட்டு போய் உள்ளது. விசாரணையின் முதற்கட்டமாக, பிரதியெடுப்பு கருவி மூலம், ஏடிஎம் தகவல்கள் திருடப்பட்டு போலி ஏடிஎம் அட்டைகள் உருவாக்கப்பட்டு, பின் பணம் திருடப்படுவதை காவல்துறை கண்டுபிடித்தது. 

ஆனால் யார் இப்படி பணம் திருடுகிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறினர். இதையடுத்து பணம் திருட்டுத்தனமாக எடுக்கப்படும் நேரத்தையும், ஏடிஎம் கண்காணிப்பு படக்கருவி பதிவுகளையும் வைத்து நான்கு பேருக்கு காவல்துறை வலைவிரித்தது. இந்த நிலையில் தற்போது புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த மருத்துவராக இருக்கும் விவேக் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவருக்கு உதவியாக சென்னையில் இருந்து ராஜேஷ் என்பவர் புதுச்சேரி சென்றுள்ளார். 

ராஜேஷ் பணம் திருட வசதியாக விவேக்தான் பிரதியெடுப்புக் கருவிகளை வாங்கி கொடுத்துள்ளார். திருட்டில் 70 விழுக்காடு பணம் விவேக்கிற்கு சென்றுவிடும், மீதம் ராNஜுக்கு செல்லும் என்று கூறப்படுகிறது. காவல்துறை தற்போது விவேக்கிடம் இருந்து 4 லட்சம் ரூபாயை கைப்பற்றியுள்ளது. இதில் தொடர்புடைய இன்னும் சிலரை தேடி வருகிறது. 

No comments:

Post a Comment

Adbox