"

Saturday, April 14, 2018

சார்பதிவாளரையே காவல் நிலையம் அனுப்பி காதல் ஜோடி! 20 நிமிடத்தில் முடிந்த 2 வருட காதல்!


திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு காதல் ஜோடி ஒன்று பதிவுத் திருமணம் செய்ய சென்றுள்ளது. காதலன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் படை சூழ சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேற்று (வெள்ளிக்கிழமை) சென்றுள்ளார். அங்கிருந்த சார்பதிவாளர் பாலச்சந்தர், காதல் ஜோடியைப் பார்த்ததும் அதிர்ந்து போயுள்ளார். கல்யாணப்பெண்ணோ அவருடைய பக்கத்து வீட்டுப்பெண் என்பதால் பதறிப்போனார். உடனடியாக அப்பெண்ணிண் பெற்றோருக்கு தகவல் அளித்த அவர், திருமணத்தை பதிவு செய்யவும் மறுத்து தாமதப்படுத்தினர்.

இதனால் கோபமடைந்த காதலனின் உறவினர்களும் நண்பர்களும், அனைத்து ஆதாரங்களும் இருந்தும், திருமணத்தை பதிவு செய்ய மறுப்பது ஏன்? என்று கேட்டு சார்பதிவாளருடன் சன்டையில் ஈடுபட்டனர். இதன்காரணமாக பாலசந்தர், பாதுகாப்பு கேட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதனால் திருமணமும் நடைபெற முடியாத சூழல் உருவானது.

இதனிடையே 20 நிமிடத்தில் காதலியின் அம்மா மற்றும் உறவினர்கள் அங்கு வந்தனர். தனது பெண்ணுக்கு அறிவுரை கூறி தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். 2 வருட காதலை ஒரு போன் மூலம் பெற்றோரிடம் தெரிவித்து இருபதே நிமிடத்தில் பிரித்து வைத்த பாலசந்தரை பெற்றோர் கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தனர். காதலனோ வந்தவழியே பார்த்து திரும்பி சென்றார்.


இதிலிருந்து எவ்வளவு பெரிய காதலாக இருந்தாலும் பெற்றோரின் அன்பான பேச்சுக்கு முன்னாள் ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும்.

No comments:

Post a Comment

Adbox