"

Saturday, March 31, 2018

Today Trending News தமிழ் நாடு

1.இளைஞர்கள் கைதாகி விடுதலை!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தடையைமீறி மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தை அடுத்து மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

2.ரயில் பயண சர்ச்சைகுறித்து கமல்
மக்களுடன் நான் கலக்கவிருந்த பயணத்தை அரசியலாக்குகிறார்கள். அதற்கு, ரயில் மேடையல்ல என்பதை நாமறிவோம். மக்கள் நலனை மய்யமாகக் கொண்ட கட்சி இது. ரயில் நிலையங்களில் பயணிகளுக்கும் மக்களுக்கும் இடையூறின்றி செய்துவிடுவோம். திருச்சியில் சந்திப்போம். நாளை நமதே'' என்று குறிப்பிட்டுள்ளார்.

3.ஐபிஎல் டிக்கெட் விற்பனை அறிவிப்பு..!
ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்கப்படும் தேதிகள்அறிவிக்கப்பட்டுள்ளன.
11-வது ஐபிஎல் டி20 போட்டி, வரும் ஏப்ரல் 7-ம் தேதி முதல் மே 27-ம் தேதி வரை நடக்கிறது. இதில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு களமிறங்க உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பையில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

4.நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு! வைகோ
நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து அதன் ஆபத்துகளைப் பற்றி மக்களிடம் விழிப்பு உணர்வு பிரசாரம் செய்யும் வகையில், தேனி மாவட்டம் கம்பம் வரை செல்லும் நடைப்பயணத்தை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று மதுரை பழங்காநத்தத்தில் தொடங்கினார்.

5.தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்
வெயில் 10 மாவட்டங்கள் உட்பட 12 இடங்களில் சதமடித்தது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
அதிகளவாக விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் தஞ்சாவூரில் 105.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.


No comments:

Post a Comment

Adbox