"

Wednesday, March 7, 2018

சீன ஸ்பேஸ் ஸ்டேஷன்; பூமியோடு மோதப்போகிறது?


சிஎஸ்என்ஏ-வின் விஞ்ஞானிகள் அதன் டியான்யாங்க் -1 ஆய்வுக்கூடமானது கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும், அது சில வார காலங்களுக்குள் பூமி மீதான மோதலை நிகழ்த்துமென்றும் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் நாசாவை போல, இந்தியாவின் இஸ்ரோவை போல - சிஎன்எஸ்ஏ என்பது சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாகும்.
இந்நிறுவனத்தின் டியான்யாங்க் -1 ஸ்பேஸ் ஸ்டேஷன் ஆனது, அதன் கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகவும், அதனை சீன விண்வெளி நிறுவனத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை, அது விண்வெளியில் தான்தோன்றித்தனமாக சுற்றி அலைவதாக கடந்த பல மாதங்களாக (இன்னும் சொல்லப்போனால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக) பல தகவல்கள் வெளியாகின. அது உண்மையில்லை என்று கூறிவந்த சிஎன்எஸ்ஏ, சமீபத்தில் அதனை ஒப்புக்கொண்டுள்ளது.
உறுதி செய்யப்பட்ட பூமி மீதான மோதல்.!
அதாவது சிஎஸ்என்ஏ-வின் விஞ்ஞானிகள் அதன் டியான்யாங்க் -1 ஆய்வுக்கூடமானது கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும், அது சில வார காலங்களுக்குள் பூமி மீதான மோதலை நிகழ்த்துமென்றும் கூறியுள்ளனர்.
கட்டுப்பாட்டை இழந்தது.!
சீனாவின் டியான்யாங்க் -1 விண்வெளி நிலையத்தின் பாதையை கவனித்த வல்லுநர்கள், அது மிகவும் விசித்திரமாக நடந்துகொள்வதாக கருத்து தெரிவித்ததின் விளைவாக, கட்டுப்பாட்டை இழந்தது என்ற ஊகங்கள் உண்மைதான் என்பது சில மாதங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது.
அன்று உலகத்தின் கவனத்தை ஈர்த்தது, இன்றோ.!
2011-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட டியான்யாங்க் -1 ஆனது சீனாவின் வளர்ந்துவரும் அதிகாரத்தின் ஒரு வலிமையான அரசியல் சின்னமாக பாராட்டப்பட்ட ஆசிய நாட்டின் முதல் விண்வெளி நிலையமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலத்தின் மீது மோதி நொறுங்கும்.!
ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாகிவுள்ளது. இன்னும் சில வாரங்களில் டியான்யாங்க் -1 ஆனது நிலத்தின் மீது மோதி நொறுங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக பாதி உலகத்திற்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
எங்கு விழும் (குறைவான வாய்ப்பு).!
மறுகையில் இந்த 8.5 டன் எடை அளவிலான மோதல் எங்கு நிகழும் என்பதை துல்லியமாய் கன்றிய முடியாவாள் விஞ்ஞானிகள் திணறி வருகின்றன. இதுவரையிலான கணிப்புகளை பொறுத்தமட்டில், நியூசிலாந்தின் ஹெரால்ட் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையத்தின் உடைந்த பாகங்களை காண வாய்ப்புள்ளது. தவிர மேற்கு ஆஸ்திரேலியாவிலும் எச்சரிக்கை விடுக்க்கப்பட்டுள்ளது.
எங்கு விழும் (அதிக வாய்ப்பு).!
கடந்த ஜனவரி மாத கணிப்பின்படி, வட அமெரிக்கா, மேற்கு ஆசியா, சீனா, மற்றும் இரண்டு கொரியாக்கள் அல்லது தெற்கு அரைக்கோளம், அர்ஜென்டீனா, சிலி, ஆஸ்திரேலியாவின் தாஸ்மேனியா அல்லது நியூசிலாந்து ஆகிய பிரதேசங்களில் விழ அதிக வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

Adbox