கிரேக்க மரபுவழி துறவி மிஹைலோ டோலோடோஸ்,இவர் இறக்கும் வரை ஒரு பெண்ணை கூட கண்டதில்லையாம். பெண் என்பவள் எப்படி இருப்பாள், அவர் உருவம் எப்படி இருக்கும் என்பதை கூட இவர் அறிந்ததில்லை.மிஹைலோ டோலோடோஸ் பிறந்தது 1856ல். இவர் பிறந்த நான்கே மணி நேரத்தில் இவரது அம்மா இறந்துவிட்டார். இவரை அதன் பின் தத்தேடுக்கவோ, பராமரித்து வளர்க்கவோ யாரும் முன்வரவில்லை. மவுண்ட் அதோஸ் மலை உச்சியில் இருந்த மடத்தின் படிகளில் இவர் கேட்பாரற்று கிடந்தார்.
பிறகு, அந்த மடமும், மடத்தில் இருந்து துறவிகளும் மிஹைலோ டோலோடோஸை தத்தெடுத்துக் கொண்டனர். அந்த மடத்தின் நான்கு சுவர்களுக்குள் தான் மிஹைலோ டோலோடோஸ்-க்கு உணவு கிடைத்தது, கல்வி கிடைத்தது. அதுவே மிஹைலோ டோலோடோஸின் உலகமாக மாறியது.மவுண்ட் அதோஸ் மலையில் பெண்கள் இருப்பதற்கு தடை இருந்தது.
பெண் பாலினம் தங்கள் துறவிற்கும், ஆன்மீகத்திற்கும் உகந்தது அல்ல என்று அவர்கள் கருதி வந்தனர். டோலோடோஸ் இருந்த மடத்தில் பெண்கள் வர அனுமதியும் இல்லை. இந்த காரணத்தால் தனது வாழ்நாளில் ஒரு பெண்ணை கூட பார்க்க இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.இந்த காரணத்தால் 1983ம் ஆண்டில் தனது 82வது அகவையில் மிஹைலோ டோல்டோடோஸ் மரணம் அடையும் வரை ஒரு பெண்ணை கூட அவர் கண்டிருக்கவில்லை.
No comments:
Post a Comment