சைபீரியாவில் விமானம் ஒன்று புறப்பட்ட சற்று நேரத்தில் அதன் சரக்கு பெட்டகம் உள்ள கதவுகள் திறக்கப்பட்டு தங்கம் ,வெள்ளிக் கட்டிகள் விழுந்தன. இது பார்ப்பதற்கு வானிலிருந்து தங்க மழை பெய்தது போல் இருந்தது.
உலகிலேயே குளிர்பிரதேசமான பகுதி என்றால் அது சைபீரியா. அங்குள்ள விமான நிலையத்துக்கு ரஷ்யாவின் சுக்கோட்கா பகுதியில் உள்ள சுரங்கத்திலிருந்து தங்கம், வெள்ளிக் கட்டிகள் சைபீரியாவின் கிராஸ்னோயார்ஸ்க் பகுதிக்கு கொண்டு செல்வதற்காக வரவழைக்கப்பட்டது.
சுமார் 18,600 பவுண்ட் (9.3 டன்) கொண்டு அந்த சரக்கை நிம்பஸ் ஏர்லைன்ஸின் ஆண்டனோவ் ஏஎன்-12 என்ற சரக்கு விமானம் ஏற்றி சென்றது. அந்த விமானம் 16 மைல் கிராஸ்னோயார்ஸ்க் பகுதியை நோக்கி வியாழக்கிழமை புறப்பட்ட சிறிது நேரத்தில் அதன் கதவுகள் திறக்கப்பட்டு 3.4 டன் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் விமான ஓடுதளத்தில் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment