"

Monday, March 19, 2018

திவாலான நிறுவனங்களில் பெரும் தொகை முதலீடு செய்துள்ள எல் ஐ சி ?


திவாலான பல நிறுவனங்களில் அரசு நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகம் பெருமளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது.
பல பெரிய மற்றும் பிரபல நிறுவனங்கள் வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டம் காரணமாக திவால் மனு அளித்து வருகிறது. அவைகளில் பெரும்பாலனவைகளை அரசு நிறுவன சட்ட தீர்ப்பாயம் அங்கீகரித்து அந்த நிறுவனங்கள் திவாலானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு முதலீட்டில் ஒரு சிறு பகுதியை மட்டுமே மீண்டும் கிடைக்கும். பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு இழப்பு மிகவும் அதிகமாகவே இருக்கும்.
அரசு நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகம் தனது பாலிசிதாரர்களிடம் இருந்து பெறும் தொகையை பல நிறுவனங்களில் முதலீடு செய்து வருவது தெரிந்ததே.
இவ்வாறு திவால் ஆன பல நிறுவனங்களில் ஆயுல் காப்பீட்டுக் கழகம் தன்னிடமுள்ள பெரும் தொகையை முதலீடு செய்துள்ளது. இதனால் பொதுமக்களின் தொகைக்கு பெரும் அபாயம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதுள்ள நிலையில் இந்த திவாலான கம்பெனிகளில் முதலீட்டில் மிக சிறிய தொகை மட்டுமே திரும்பப் பெரும் நிலையில் ஆயுள் காப்பிட்டுக் கழகம் உள்ளது.
அத்துடன் வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட நிரவ் மோடியின் கீதாஞ்சலி ஜெம்ஸ், விடியோகோன் போன்ற நிறுவனங்களிலும் ஆயுள் காப்பீட்டுக் கழகம் முதலீடு செய்துள்ளது. இது குறித்து கழகத்தின் நிர்வாக இயக்குனர் ஹேமந்த் பார்கவா, "கடந்த மூன்று வருடங்களாக நாங்கள் அதிகம் பாதுகாப்புள்ள நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்து வருகிறோம். ஆனால் ஆயுள் காப்பிட்டு கழகம் மிகவும் பழமையானது. முன் காலத்தில் பல பெரிய முதலீடுகளை அது செய்துள்ளது. அது குறித்து தற்போது எதுவும் செய்ய முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Adbox