"

Monday, February 12, 2018

வாட்ஸ் ஆப் மூலம் இனி பணமும் டிரான்ஸ்பர் செய்யலாம்..

ஒரு சாட் செய்ய உதவும் ஆப் முதல்முறையாக பணம் அனுப்பும் வசதியை கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம் பொருளாதர ரீதியாகவும் இந்த ஆப் பயன்பட இருக்கிறது. முதலில் பீட்டா வர்சனில் மட்டும் செயல்பட்டு வந்த இந்த வசதி தற்போது எல்லா சாதாரண வர்சனிலும் பயனுக்கு வந்துள்ளது.
இதில் பணம் அனுப்புவது மிகவும் எளிமையான ஒன்றாகும். இதற்கு சில எளிய வழிமுறைகள் இருக்கிறது.
எப்படி
என்ன செய்யலாம்
இந்த வசதியை பெற முதலில் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்ய வேண்டும். அதன்பின் நமக்கு வரும் மெசேஜ் ஒன்றை வைத்து இதை எளிதாக ஆக்டிவேட் செய்யலாம்.
ஆனால் இது ஆக்டிவேட் ஆக சில நிமிடம் எடுத்துக்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வழிமுறை
ஒரே நம்பர்
வாட்ஸ் ஆப்பில் இருக்கும் பேமெண்ட் அக்கவுண்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து நாம் அக்கவுண்ட் உருவாக்கலாம். ஆனால் நாம் பேங்க் அக்கவுண்ட் உடன் மட்டுமே இதை இணைக்க முடியும். பேங்கில் எந்த போன் நம்பர் கொடுத்து இருக்கிறோமோ அதை மட்டுமே பயன்படுத்த முடியும்.
கடைக்கு
அனுப்ப முடியாது
இதன் காரணமாக நாம் கடைகளுக்கு பணம் கொடுக்க முடியாது. அப்படி கொடுக்க வேண்டும் என்றால் அந்த கடைக்காரர் நம்பரை நம்முடைய மொபைல் போனில் சேவ் செய்ய வேண்டும். இதற்கு குறைந்தபட்ச தொகை எவ்வளவு வசூலிக்கப்படும் என்று கூறப்படவில்லை.
அதுவே காட்டும்
அதுவே
இந்த வசதி யாரிடம் இருக்கிறது என்று நாம் தேட வேண்டியது இல்லை. நம்முடைய நண்பர்களிடம் யாரெல்லாம் இந்த வசதி இருக்கிறது என்று வாட்ஸ் ஆப்பே காட்டும். அதை வைத்து நாம் பணம் அனுப்பலாம். பணம் சென்ற பின் நமக்கு மெசேஜ் வரும்.

No comments:

Post a Comment

Adbox