"

Tuesday, February 13, 2018

ஜியோ வாடிக்கையாளரா நீங்கள்?.......மீண்டும் 3 மாதத்திற்கு இலவசம்

மார்க்கெட்டை மீண்டும் கலக்குவதற்காக களத்தில் இறங்க உள்ளது ஜியோ.
ஜியோ அறிமுகமானதில் இருந்து மக்களின் மத்தியில் நீங்கா இடம் பிடித்து தற்போது வரை, ஜியோவால் மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் பலவும் பெரும் சரிவை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில்,தற்போது பிராட்பேண்ட் பிரிவில் களமிறங்கியுள்ளது ஜியோ. அதன் அடிப்படையில், வரும் செப்டம்பர் மாதம் முதல் ஜியோ பிராட்பேண்ட் செயல்பாட்டிற்கு வரவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.


அதாவது பட்ஜெட் விலையில் நொடிக்கு 1 ஜி.பி. வேகத்தில் இணையதள சேவையை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.



தற்போது, இதற்கு முன்னோட்டமாக இந்தியாவின் குறிப்பிட்ட 10 நகரங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதில் முதற்கட்டமாக மும்பை, டெல்லி, ஆமதாபாத், ஜாம்நகர், சூரத் மற்றும் வதோதரா போன்ற இடங்களில் ஜியோபைபர் வழங்கப்படுகிறது.
இத்தகைய திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு தற்சமயம் ஒவ்வொரு மாதமும் 100 ஜி.பி இலவச டேட்டா வழங்க உள்ளது. அதன் அடிப்படையில் அறிமுக சலுகையாக டேட்டாவை இலவசமாக வழங்க உள்ளது. அவ்வாறே மாதம் 100 ஜி.பி வீதம், 3 மாதத்திற்கு இலவசமாக வழங்க உள்ளது.
இந்த சலுகை முடிந்ததும், அதற்கு பின்னர் படிப்படியாக வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 500 ரூபாய்க்கு 600 ஜி.பி டேட்டாவும், 2000 ரூபாய்க்கு 1000 ஜி.பி டேட்டா என்று நொடிக்கு100 எம்.பி. வேகத்தில் வழங்க இருக்கிறது 

No comments:

Post a Comment

Adbox