இந்திய டெலிகாம் துறையில் நடக்கும் கட்டண யுத்தத்தை சமாளிக்கும் வண்ணம் அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனமானது நேற்றுதான் முற்றிலும் புதிய திட்டமான பிபிஎல் 1595 திட்டத்தை அறிவித்தது. சந்தையில் யாருமே வழங்காத 100% வரம்பற்ற டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு , பிஎஸ்என்எல் தனது புதிய 'கூல்' என்கிற அற்புதமான திட்டத்தை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய கூல் திட்டத்தின் வாயிலாக வரம்பற்ற தரவு அணுகலுடன் சேர்த்து வரம்பற்ற உள்ளூர் மற்றும் எந்த நெட்வொர்க்குக்கும் உடனான ரோமிங் குரல் அழைப்புகளையும் அனுபவிக்கலாம். மேலும் செல்லுபடியாகும் காலம் வரையிலாக நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ்களையும் பெறலாம்.
ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளில் இருந்து மொத்தம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் விலை நிர்ணயம் ரூ.1099/- ஆகும்.. அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தனது 4ஜி சேவைகளை நாட்டில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே அது 4ஜி சேவைகளை தொடங்கியும் உள்ளதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிட்டுள்ளபடி இந்த புதிய 'கூல்' வாய்ப்பின் கீழ், செல்லுபடியாகும் தேதி வரை ஒவ்வொரு நாளும் வரம்பற்ற தரவுகளை அனுபவிக்கலாம். இதன் அர்த்தம் டேட்டாவிற்கு எந்தவிதமான வரம்பும் கிடையாது. மறுகையில் குரல் அழைப்பும் வரம்புகளின்றி கிடைக்கும்.
No comments:
Post a Comment