"

Monday, December 11, 2017

டோக்லாம் பகுதியில் 1600 சீன ராணுவ வீரர்கள் குவிப்பு

பிரச்னைக்குரிய டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் 1600 வீரர்களை குவித்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: சிக்கிம் பூடான் திபெத் நாடுகள் எல்லை பகுதியில் சீன எல்லையை ஒட்டிய பகுதிகளில் சீன ராணுவம் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து இருநாட்டு ராணுவ வீரர்களும் எல்லைப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து சாலை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது. போர் பதற்றம் இதைத்தொடர்ந்து சீனா சுமார் 3 ஆயிரம் வீரர்களை அங்கே குவித்தது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை எல்லைக்கு அனுப்பி வைத்தது. இதனால் தொடர்ந்து பலநாட்களாக அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வந்தது.
தொடர்ந்து கடந்த செப்.3-5ம் தேதி வரையில் சீனாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சென்ற போத இது குறித்து பேச்சு வார்த்தை நடந்தது.அதனையடு்தது பிரச்னைக்குரிய பகுதியில் இருந்து இரு தரப்பும் தங்களது ராணுவங்களை வாபஸ் பெற்றது. 1600 வீரர்கள் குவிப்பு இந்நிலையில் சீனாவின் அதிபராக ஷி ஜிங்பிங் இரண்டாம் முறையாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து மீண்டும் பிரச்னையை அதிகரிக்கச் செய்யும் வகையில் அதே பகுதியில் 1600 முதல் 1800 ராணவ வீரர்களை சீனா நிறுத்தி உள்ளது. தற்போது இரண்டு ஹெலிகாப்டர்கள் இறங்கு தளம், மேம்படுத்தப்பட்ட சாலை, கழிவறை, கட்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் மீண்டும் பதற்ற சூழ்நிலைஉருவாக கூடும் என அஞ்சப்படுகிறது.

No comments:

Post a Comment

Adbox