அழற்சி அல்லது கிருமிகளின் தொற்றுக்கள் காரணமாக நம் உடலில் உள்ள செல்களுக்கு வெளிப்புறத்தில் இருக்கும் சுவருக்கு இடையை நீர் தேங்கி கொள்ளும். அதனால் அந்த இடம் வீங்க தொடங்கி விடும்.
ஆனால் சிலருக்கு எந்த வித நோய் தொற்றும் இல்லாமல் கூட ஏற்படும். இது போன்று நீர் தேக்கத்தை ஒடிமா என்று கூறுவார்கள்.
உடலில் நீர்தேக்கம் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?
பெருவிரலை பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து அழுத்தி 2-3 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பின் அழுத்தத்தை விடுவித்து மெதுவாக பெருவிரலை எடுக்க வேண்டும்.
அப்போது அந்த பகுதி மறுபடியும் பழைய நிலைக்கு ஸ்பிரிங் மாதிரி வந்து மிகவும் மென்மையாக மாறி விட்டால் அது ஒடிமா கிடையாது.
ஆனால் பழைய நிலைக்கு வர 2-3 நிமிடங்கள் எடுத்து கொண்டால் கண்டிப்பாக அது நீர்தேக்கம் உள்ளது என்று அர்த்தம்.
உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றுவது எப்படி?
- வெள்ளை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். அதனால் நமது உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட நீர் மற்றும் நச்சுக்கள் அனைத்தும் சிறுநீரகம் வழியாக வெளியேறி விடும்.
- 2 கப் நீரை கொதிக்க வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகம் போட்டு ஒரு 15-20 நிமிடங்கள் மூடி வைத்த பின் வடிகட்டி வெதுவெதுப்பான நிலையில் ஒரு நாளைக்கு 2 முறை குடிக்க வேண்டும்.
- உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்காமல் 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பழத்தின் சாறை கலந்து ஒரு நாளைக்கு 2 முறைகள் என்று வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
- சில ஜஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டிக் கொண்டு வீங்கிய இடத்தில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து மறுபடியும் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதை 1 மணி நேரம் செய்ய வேண்டும்.
- பூண்டு வெங்காயத்தை நசுக்கி ஒரு நாளைக்கு 2 முறைகள் என்று தொடர்ந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.
- 1 கப் தண்ணீர் சூடுபடுத்தி அதில் 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதைகள், நன்கு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி ஒரு நாளைக்கு 3 முறைகள் வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும்.
- வாழைப்பழத்தில் அதிகமான பொட்டாசியம் உள்ளது. எனவே ஒரு நாளைக்கு 3 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் நம் உடலிலுள்ள அதிகப்படியான நீர் வெளியேறிவிடும்.
- உலர்ந்த திராட்சையை ஒரு கைப்பிடியளவு எடுத்து அதை இரவில் முழுவதும் ஊறவைத்து அடுத்த நாள் காலையில் அதை சாப்பிட்டு வந்தால், நம் உடலில் கெட்ட நீர் தேங்காது.
- ஒரு கப் யோகார்ட்டை சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் செல்களின் சுவர்களுக்கு இடையே உள்ள நீர் தேக்கம் சரியாகி விடும்.
- தினமும் ஒரு டம்ளர் கிரான்பெர்ரி ஜூஸை குடித்து வந்தால் நம் உடலில் உள்ள நீர் தேக்கத்தை சரிசெய்து, உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத நீர்ச்சத்தையும் வெளியேற்றிவிடும்.
- 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீர்தேக்கம் குறையும்.
- 1 பக்கெட் நிறைய வெதுவெதுப்பான தண்ணீரில் 1 டேபிள் ஸ்பூன் எப்சம் உப்பு கலந்து அந்நீர் வீக்கம் உள்ள உடல் பகுதியை 10-15 நிமிடங்கள் மூழ்க வைக்க வேண்டும்.
No comments:
Post a Comment