"

Thursday, July 9, 2020

நெஞ்சில் பிடித்துள்ள சளியை வெளியேற்ற உதவும் ஓமம்



நெஞ்சில் பிடித்துள்ள சளியை வெளியேற்ற உதவும் ஓமம் !
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நெஞ்சில் பிடித்திருக்கும் சளியை விரட்டுவதற்கு பல வழிமுறைகளை நாம் கடைபிடித்தாலும் ஓமம் என்று ஒன்று இருக்கின்றது. ஒரு மான் பற்றி பலருக்குத் தெரியவே தெரியாது ஆனால் ஓமத்தில் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.
எனவே ஓமத்தை பற்றிய மருத்துவ குணங்களும் மற்றும் நெஞ்சு சளியை விரட்டுவதற்கு எப்படி ஓமம் பயன்படுகிறது என்ற இப்பதிவில் நாம் பார்க்கலாம்.
ஓமம் பார்ப்பதற்கு மிக சிறியதாக இருக்கும். ஆனால் அதன் நன்மைகள் மிகப் பெரியது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பசியைத் தூண்டுவதற்கும் உதவுகிறது.
நெஞ்சு சளி மற்றும் வறட்டு இருமல் இருப்பவர்களுக்கு ஓமம் ஒரு சிறந்த மருந்தாக அமைகிறது. வயிறு முதலிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஓமம் மிக மருந்தாக அமைகிறது.
வயிற்றுப் பகுதியில் புண் இருப்பவர்கள் கண்டிப்பாக ஓமம் கசாயத்தை குடித்து வந்தால் வயிற்றில் இருக்கும் புண் சரியாகிவிடும்.

மற்றும் செரிமான சக்தியை தூண்டுவதற்கு ஓமம் சிறந்த மருந்தாக அமைகிறது.
ஒரு பாத்திரத்தில் 100 மில்லி தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஒரு ஸ்பூன் ஓமம் போட்டு நன்றாக கொதிக்க விடவேண்டும் பின்பு அந்த தண்ணீரை நன்றாக வற்றவைத்து அத்தண்ணீரை குடித்து வந்தால் கண்டிப்பாக நெஞ்சு சளி இருப்பவர்கள் சளி தொல்லையிலிருந்து விடுபட்டு விடலாம்.
சிறுது ஓமம பொடி மற்றும் சிறிது உப்பு கலந்த தண்ணீர் குடித்து வந்தால் கண்டிப்பாக நெஞ்சில் சளி முற்றிலுமாக சரியாகிவிடும்.
புத்துணர்ச்சியாக இல்லாமல் சோம்பலாக இருப்பவர்கள் உடனே ஒரு கப் தண்ணீரில் ஓமம் கலந்து குடித்து வந்தால் அவர்கள் மிகவும் ஆரோக்கியமாக புத்துணர்ச்சியாக இருப்பார்கள்.
உடல் வலி மற்றும் கை கால் வலி இருப்பவர்கள் கண்டிப்பாக ஓமம் தண்ணீர் குடித்து வந்தால் உடல் வலி சரியாகிவிடும்.
பற்களில் வலி ஏற்பட்டால் உடனே சிறிது ஓமத் தண்ணீர் எடுத்துக் கொடுத்து வந்தால் கண்டிப்பாக பார்களில் உள்ள வலி நின்றுவிடும்.
மற்றும் பெரியவர்களுக்கும் பசி இன்மை காரணத்தால் சரியாவே சாப்பிட மாட்டார்கள் அப்படி இருப்பவர்கள் சிறிது ஓமத்தை எடுத்து நன்றாக ஊறவைத்து அந்த தண்ணீரை குடித்து வர வேண்டும் உடனே பசியின்மை தொல்லை முற்றிலுமாக நீங்கி நன்றாக சாப்பிடு வதற்கு பசி எடுக்கும்.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கண்டிப்பாக இந்த தண்ணீரை குடித்துவர வேண்டும்.
சிறிது ஓமத்தை எடுத்து நன்றாக வறுத்துக் கொண்டு பின்பு அதனை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்தால் நன்றாக இருக்கும் மற்றும் சுவையாக இருக்கும்.
குழந்தைகளுக்கு ஓமத்தை தண்ணீர போட்டு குடிக்கும் போது சிறிது தேன் கலந்து கொடுங்கள்.
குழந்தைகள் ஓமத்தை சாப்பிட்டால் கண்டிப்பாக அவர்களுக்கு கை கால் வலி இருக்கவே இருக்காது மற்றும் அவர்களுக்கு நன்றாக பசி எடுக்கும்.
என்றாவது திட உணவை சாப்பிட்டால் கண்டிப்பாக இந்த தண்ணீரை குடித்துவர வேண்டும் அப்படி குடித்தால் செரிமான சக்தி அதிகரிக்கும் மற்றும் சாப்பிட்ட சாப்பாடு செரிமானம் ஆகிவிடும்.
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் இருந்தால் கண்டிப்பாக சிறிது ஓமத்தை எடுத்து பொடி செய்து குழந்தைகளுக்கு நாக்கில் தடவி விட வேண்டும். அப்படி தடவினால் மலச்சிக்கல் பிரச்சன முற்றிலுமாக நீங்கிவிடும்.
இதுவே ஓமத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் சிறப்பு தன்மைகள் ஆகும்.

No comments:

Post a Comment

Adbox