"

Sunday, July 5, 2020

தினம் 2 முறை இதை செய்தால் போதும்! மலச்சிக்கல் ஓடியே போய்விடும்!




ஒவ்வொருவரும் தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்பட்டு வருகிறோம். மலச்சிக்கல் ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகளும், பழக்கவழக்கங்களும் தான் காரணமாக அமைகின்றன.

ஒருவர் உடலுக்கு உழைப்பு ஏதும் கொடுக்காமல் உண்பது, உட்கார்ந்து வேலை செய்வது என்று இருந்தால், உணவுகள் சரியாக செரிமானமாகாமல், நாளடைவில் அது மலச்சிக்கலாக மாறிவிடுகிறது.

அதிலும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகள் சூழ்ந்திருக்கும் தற்போதைய காலத்தில், ஒவ்வொருவரும் மலச்சிக்கலால் அன்றாடம் அவஸ்தைப்பட்டு வரவேண்டிய சூழல் உள்ளது.

இந்த மலச்சிக்கல் பிரச்சனையை ஒருவர் ஆரம்பத்திலேயே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால், பின் மூல நோய் வரக்கூடும்.

மலச்சிக்கலுக்கான அறிகுறிகள்



மிகவும் இறுக்கமான மலம் வயிறு பாரமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.பசியின்மை, சில நேரங்களில் வயிற்றுப் பகுதியில் லேசான வலியை அனுபவிக்கக்கூடும்.

மலச்சிக்கல் வராமல் தடுப்பது எப்படி?

செம்பருத்தி இலைகளை தூள் செய்து தினமும் இரண்டு வேளைகள் சாப்பிட்டு வர மலச்சிக்கல் விரைவில் சரியாகும்.

மலசிக்கல் உள்ளவர்கள் நீர்ச்சத்து மிக்க முலாம் பழம், தக்காளி மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலசிக்கலிலிருந்து விடுபடலாம்.

தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை வகையை காலை அல்லது மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கலிருந்து குணமாகலாம்.

கொய்யாப் பழத்தை சாப்பிடும் போது அதன் விதையுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். இவ்வாறு தினமும் ஒன்று சாப்பிட்டால் குடல் இயக்கம் சீராகி, மலச்சிக்கல் நீங்கி விடும்.


எலுமிச்சை பழத்தின் சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் வெந்நீரை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் மலச்சிக்கல் வரவே வராது.

எள் விதையைப் பொடி செய்து அதை பனை வெல்லத்துடன் கலந்து 4-6 தேக்கரண்டி அளவிற்கு தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலை தடுத்து விடலாம்.

மோருடன் இஞ்சி, கல் உப்பு, பெருங்காயம் ஆகியவை கலந்து உணவுடன் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் சரியாகும்.

மாம்பழத்தை இரவு நேரத்தில் உணவு சாப்பிட்டு 30 நிமிடம் கழித்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் குணமாகும்.

உலர்ந்த திராட்சை பழத்தைத் தேனில் ஊறவைத்து அதை தினமும் பாலுடன் சேர்த்து ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கி விடும்.

வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி அதை விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட்டு வர, மலச்சிக்கல் சரியாகும்.

No comments:

Post a Comment

Adbox