சரும வளர்ச்சி,உடலுக்கு பொலிவு, தேவையான வைட்டமின் ஏ சத்துக்களைத் கொண்டு இருக்கும் கேரட்..
கேரட் கண் பார்வைக் கோளாறுகளை சரிசெய்யும் .. கேரட்டை பச்சையாகவோ... பொரியல் செய்தோ குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆனால் எப்போதும் கேரட்டா என்று கேட்காமல் இருக்க கேரட்டை கொண்டு குழந்தைகளுக்கு விதவிதமாய் செய்து கொடுக்கலாம்...கேரட்டை சிறுதுண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அடித்து சாறு பிழிந்து சர்க் கரை சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். சத்துக்களும் சேரும். ஆரோக்யமானதாகவும் இருக்கும். கேரட் கீர் எல்லோருக்கும் பிடித்த மான ஒன்று... உச்சி வெயில் தாகத்தில் ஃப்ரிட்ஜில் வைத்து கேரட் கீர் பரிமாறலாம்.
தேவையான பொருள்கள்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 150 கிராம்
கேரட் - 4
பால் - 1 லிட்டர்
முந்திரி, திராட்சை - தேவையான அளவு
குங்குமப்பூ - 1/4 டீ ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீ ஸ்பூன்
பாதாம், முந்திரி, பிஸ்தா, வெள்ளரி விதை, சாரைப் பருப்பு
தயாரிக்கும் முறை
கேரட்டை தோல் சீவி குக்கரில் 3 விசில் விட்டு வேக வைக்கவும்.. கேரட் வெந்ததும் மிக்ஸியில் மைய அரைத்து வைக்கவும்.பால் கொதிக்கும் போது மசித்த கேரட் விழுதை சேர்த்து நன்றாக கலக்கி சர்க்கரையைக் கொட்டவும்.ஏலத்தூள், உலர் பழங்கள் சேர்த்து கலக்கவும்.பின்னர் அதன் மீது பாதாம், முந்திரி, பிஸ்தா, வெள்ளரி விதை, சாரைப் பருப்பு மற்றும் குங்குமப்பூவை தூவவும். சூடாக குடிப்பதாக இருந் தால் நெய்யில் உலர் பழங்களை வறுத்துப்பொடித்து குடுக்கலாம். குளிர்ச்சியாக குடிக்க விரும்பினால் நெய் சேர்க்காமல் அப்படியே சேர்க்கவும்.கேரட் கீர் ரெடி.
No comments:
Post a Comment