"

Monday, March 2, 2020

கந்தர்வமான மூலிகை குடிநீர் தயாரிப்பு முறைகளும் அதன் மருத்துவ பலன்களும்

Herbal Drinking Water Benefit 


ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் பால் காயத்தை (பெருங்காயம்) தட்டிப்போட்டு சூடாக்காமல் 2 மணி அப்படியே ஊறவைத்து பிறகு குடித்து வந்தால் வாய்வுப்பிடிப்பு ஏப்பம், மூட்டுவலி குணப்படும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் அரை மூடி எலுமிச்சைப் பழம், தேன் சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும். உடலில் உள்ள நாள்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, இந்துப்பு போன்றவற்றை கலந்து வடிகட்டி அப்படியே குடித்துவந்தால், உடல் சோர்வு அதிக தாகம் அடங்கும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் நாவற்பழக் கொட்டைகளை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அதிக சர்க்கரை குறையும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கடுக்காயை தட்டிப்போட்டு சூடாக்கி குடித்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிதளவு சுக்கு, மிளகு, கொத்தமல்லியை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் அதிக சோர்வு சளித்தொல்லை, முகத்தில் ஏற்படும் கருவளையம் தொண்டைக்கட்டு குணமாகும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் சீரகம் போட்டு சிறிதளவு சூடாக்கி குடித்து வந்தால் அஜீரணக்கோளாறு வயிற்று உப்புசம் உடல் சூடு தணியும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் கையளவு ஆவாரம் பூவை போட்டு சூடாக்கி வடிகட்டி குடித்து வந்தால் கை, கால் பாதங்களில் சேற்றுப்புண், நகச்சொத்தை உடல் அரிப்பு போன்றவை குணமாகும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு சிறிது சூடாக்கி வடிக்கட்டி குடித்து வந்தால் குடலிறைச்சல், வயிற்றுப்பூச்சி அடிக்கடி வாய்வு பிரிதல், வயிற்றுவலி குணமாகும்.

No comments:

Post a Comment

Adbox