"

Monday, January 6, 2020

வரலாற்றில் இன்று ஜனவரி 6 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று ஜனவரி 6 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.

நிகழ்வுகள்
1066 – இங்கிலாந்தின் மன்னனாக ஹாரல்ட் கோட்வின்சன் முடிசூடிக் கொண்டான்.
1690 – முதலாம் லெப்பல்ட் மன்னனின் மகன் ஜோசப் ரோமின் மன்னன் ஆனான்.
1838 – சாமுவேல் மோர்ஸ் மின்னியல் தொலைத்தந்தியை முதன் முறையாக வெற்றிகரமாக சோதித்தார்.
1887 – எதியோப்பியாவின் ஹரார் நகர மன்னன் இரண்டாம் அப்-தல்லா எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக் மீது போர் தொடுத்தான்.
1899 – இந்தியாவின் வைசிராயாக கேர்சோன் பிரபு நியமிக்கப்பட்டார்.
1900 – போவர்கள் தென்னாபிரிக்காவின் லேடிஸ்மித் நகரைத் தாக்கினர். 1,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1907 – மரியா மாண்ட்டிசோரி தனது முதலாவது பாடசாலையை தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக ரோமில் ஆரம்பித்தார்.
1912 – நியூ மெக்சிக்கோ 47வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
1928 – தேம்ஸ் ஆறு லண்டனில் பெருக்கெடுத்ததில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
1929 – அன்னை தெரேசா இந்தியாவின் வறிய மற்றும் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக கல்கத்தாவைச் சென்றடைந்தார்.
1936 – கலாஷேத்திரா சென்னை அடையாறில் ஆரம்பிக்கப்பட்டது.
1940 – போலாந்தின் பொஸ்னான் நகரில் நாசி ஜேர்மனியினரால் பலர் கொல்லப்பட்டனர்.
1950 – ஐக்கிய இராச்சியம் மக்கள் சீன குடியரசை அங்கீகரித்தது.
1959 – பிடெல் காஸ்ட்ரோ கவானாவை அடைந்தார்.
2007 – கொழும்பிலிருந்து 36கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.
2007 – இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தில் பிற மாநிலத்தவரைக் குறிவைத்து உல்ஃபா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – இலங்கை, காலி மாவட்டம் மீட்டியகொட சீனிகம பகுதியில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 15 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டும் 40 பேர் வரை படுகாயமும் அடைந்தனர்.
பிறப்புகள்
1883 – கலீல் ஜிப்ரான், எழுத்தாளர் (இ. 1931)
1899 – சேர் சிற்றம்பலம் கார்டினர், இலங்கைத் தொழிலதிபர் (இ. 1960)
1910 – ஜி. என். பாலசுப்பிரமணியம், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1965)
1924 – கிம் டாய் ஜுங், தென்கொரியக் குடியரசுத் தலைவர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 2009)
1944 – ரோல்ஃப் சிங்கேர்னாகல், நோபல் பரிசு பெற்றவர்
1959 – கபில் தேவ், இந்தியத் துடுப்பாட்டக்காரர்.
1967 – ஏ. ஆர். ரஹ்மான் இந்திய திரைப்பட இசையமைப்பாளர்
1982 – கில்பர்ட் அரீனஸ், அமெரிக்கக்க் கூடைப்பந்து வீரர்
இறப்புகள்
1852 – லூயி பிரெயில், பார்வையற்றவர்களுக்கான எழுத்தினை உருவாக்கியவர் (பி. 1809)
1884 – கிரிகோர் ஜோஹன் மெண்டல் ஆஸ்திரியப் பாதிரி, மரபியல் அறிவியலின் தந்தை (பி. 1822)
1918 – கேன்ட்டர், ஜெர்மன் கணிதவியலாளர் (1845
1919 – தியொடோர் ரோசவெல்ட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர் (பி. 1858)
1990 – பாவெல் செரென்கோவ், நோபல் பரிசு பெற்ற இரசியர் (பி. 1904)
1997 – பிரமீள், ஈழத் தமிழ் எழுத்தாளர்,
2010 – திருவேங்கடம் வேலுப்பிள்ளை – விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை

No comments:

Post a Comment

Adbox