"

Sunday, January 5, 2020

வரலாற்றில் இன்று ஜனவரி 4 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்


வரலாற்றில் இன்று ஜனவரி 4 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.

நிகழ்வுகள்
கிமு 46 – டைட்டஸ் லபீனஸ் ருஸ்பீனா என்ற நகரில் இடம்பெற்ற சமரில் ஜூலியஸ் சீசரைத் தோற்கடித்தார்.
1493 – கொலம்பஸ் தான் கண்டுபிடித்த புதிய உலகை விட்டுப் புறப்பட்டார்.
1642 – இங்கிலாந்து மன்னன் முதலாம் சார்ல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்ய தனது படைவீரர்களை அனுப்பினார்.


1698 – லண்டனில் அரச மாளிகையான வைட்ஹோல் தீயினால் சேதமுற்றது.
1717 – நெதர்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியன கூட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தின.
1762 – ஸ்பெயின் மற்றும் நேப்பில்ஸ் மீது இங்கிலாந்து போரை அறிவித்தது.
1847 – சாமுவேல் கோல்ட் தனது முதலாவது சுழல் துப்பாக்கியை அமெரிக்கஅரசுக்கு விலைக்கு விற்றார்.
1854 – கப்டன் வில்லியம் மக்டொனால்ட் என்பவர் மக்டொனால்ட் தீவுகளைக் கண்டுபிடித்தார்.
1878 – சோஃபியா நகரம் ஒட்டோமான் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றது.
1884 – ஃபாபியன் அமைப்பு லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.
1889 – இலங்கையில் சபரகமுவா மாகாணம் என்ற புதிய மாகாணம் சேர் ஈ. என். வோக்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது.
1896 – யூட்டா 45வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
1912 – பிரித்தானியக் காலனித்துவ நாடுகளில் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1948 – பர்மா ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுதலை பெற்றது.
1951 – சீனா மற்றும் வட கொரியப் படைகள் சியோல் நகரைக் கைப்பற்றின.
1958 – 14 வயது பொபி ஃபிஷர் ஐக்கிய அமெரிக்காவின் சதுரங்க சம்பியன் போட்டியில் வெற்றி பெற்றார்.
1958 – முதலாவது செயற்கைக் கோள் ஸ்புட்னிக் 1 தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி பூமியில் வீழ்ந்தது.
1959 – லூனா 1 சந்திரனுக்கு மிக அண்மையில் சென்ற விண்கலம் ஆனது.
1990 – பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் பயணிகள் தொடருந்து ஒன்று சரக்கு தொடருந்துடன் மோதியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1998 – அல்ஜீரியாவில் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளில் 170 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
2004 – ஸ்பிரிட் என்ற நாசாவின் தரையுளவி செவ்வாயில் தரையிறங்கியது.
பிறப்புகள்
1643 – (பழைய யூலியன் நாட்காட்டியில் டிசம்பர் 25, 1642) சர் ஐசக் நியூட்டன், ஆங்கில அறிவியலாளர் (இ. 1727)
1809 – லூயி பிறெயில், புடையெழுத்து கண்டுபிடித்தவர் (இ. 1852)
1813 – ஐசக் பிட்மன், ஆங்கிலேய மொழியியலாலர் (இ. 1897)
1889 – பதஞ்சலி சாஸ்திரி, 2வது இந்தியத் தலைமை நீதிபதி
1941 – க. துரைரத்தினசிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
1984 – ஜீவா, தமிழ்த் திரைப்பட நடிகர்
1985 – ஏல் ஜெஃபர்சன், அமெரிக்க கூடைப்பந்து வீரர்
இறப்புகள்
1941 – என்றி பெர்குசன், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு மெய்யியலாளர் (பி. 1859)
1960 – அல்பேர்ட் காம்யு, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1913)
1961 – எர்வின் சுரோடிங்கர், ஆஸ்திரிய-ஐரிய இயற்பியலாளர் (பி. 1887)
1994 – ராகுல் தேவ் பர்மன், இந்திய இசையமைப்பாளர் (பி. 1939)
2003 – கான்ராடு ஹால், அமெரிக்க ஒளிப்பதிவாளர் (பி. 1927)
சிறப்பு நாட்கள்
பர்மா – விடுதலை நாள் (1948)
காங்கோ மக்களாட்சிக் குடியரசு – மாவீரர் நாள்

No comments:

Post a Comment

Adbox