உடல் உபாதைகளுக்கு
அதிக நறுமணமும், கார்ப்பு சுவையும், வெப்ப தன்மையும் கொண்ட இந்த ஏலக்காய் சிறுநீரை பெருக்க கூடியது. குறிப்பாக தாகம் , வியர்வையுடன் கூடிய தலைவலி, வறட்சி, கபம் போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்.
உயர் இரத்த அழுத்தம் குறைய:-ஏலக்காய் நன்மைகள் - ஏலக்காய் கெட்ட கொழுப்புகளை கட்டுப்படுத்துவதுடன், உடலில் உயர் இரத்த அழுத்தத்தை குறைகின்றது. எனவே ஒரு கப் ஏலக்காய் டீ அருந்துவது மிகவும் ஆரோக்கியத்திற்கு நல்லது.
மன அழுத்தம் குணமாக
நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் போது ஒரு கப் ஏலக்காய் டீயை அருந்துங்கள் அவற்றில் இருக்கும் நறுமணம், உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்கும்.
வறட்டு இருமல் குணமாக:-ஏலக்காய் பயன்கள் - பச்சை ஏலக்காய் உங்களுடைய சுவாச பிரச்சனைகளை சரி செய்கிறது. அதாவது மூக்கடைப்பு, மூச்சி திணறல், இருமல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது. எனவே உணவில் அதிகம் ஏலக்காயை சேர்த்து கொள்ளுங்கள்.
தொடர்ச்சியான விக்கலுக்கு
உங்களுக்கு நிறுத்த முடியாத தொடர்ச்சியான விக்கல் ஏற்படும் போது, ஒரு கப் ஏலக்காய் டீ அருந்துவதினால் விக்கல் பறந்தோடிவிடும். ஏனென்றால் ஏலக்காய் விக்கல் உண்டாக்குவதன் வாழ்வினை ரிலாக்ஸ் செய்கின்றது.நம் வாயில் உள்ள கெட்ட கிருமிகளை அளிப்பதில் ஏலக்காய் சிறந்து விளங்குகிறது. மேலும் வாயில் ஏற்படும் கெட்ட துர்நாற்றங்களை போக்குகின்றது.
வயிற்று வலி குணமாக
ஏலக்காய், சுக்கு, கிராம்பு, சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து தினமும் மூன்று வேளை சிறிதளவு எடுத்து 2 கிராம் தேனில் கலந்து சாப்பிட வயிற்று வலி குணமாகும்.
கர்ப்ப காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் அஜீரணம், குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகள் சரியாக, ஏலக்காயின் மேல் தோல் பகுதியை உரித்துவிட்டு உள்ளிருக்கும் எல்லரிசியை எடுத்து, காயவைத்து பொடி செய்து வைத்து கொள்ளவும்.பின்பு இரண்டு கிராம் ஏலக்காய் தூளை ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறுடன் கலந்து, ஒவ்வொரு வேளையும் உணவருந்திய பிறகு அருந்த வேண்டும்.இவ்வாறு செய்வதினால் கர்ப்ப காலங்களில் ஏற்படும் அஜீரணம், குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
No comments:
Post a Comment