"

Sunday, November 3, 2019

வரலாற்றில் இன்று நவம்பர் 2 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று நவம்பர் 2 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.


நிகழ்வுகள்
1570 – வட கடலில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக ஒல்லாந்தில் 1,000 பேர் வரையில் இறந்தனர்.
1834 – முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரீசியஸ் சென்றனர்.
1868 – நியூசிலாந்து சீர் நேரத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது.
1889 – வடக்கு மற்றும் தெற்கு டகோட்டா ஐக்கிய அமெரிக்காவின் 39வது, 40வது மாநிலங்களாக முறையே இணைந்தன.
1899 – தென்னாபிரிக்காவில் போவர்கள் பிரித்தானியர்கள் வசம் இருந்த லேடிஸ்மித் பகுதியை 188 நாட்கள் பிடித்து வைத்திருந்தனர்.
1914 – ரஷ்யா ஓட்டோமான் பேரரசு மீது போரை அறிவித்தது.


1917 – பிரித்தானியாவின் வெளிநாட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பான செயலாளராக இருந்த ஆதர் பெல்ஃபர் வெளியிட்ட பிரகடனத்தில் யூதர்களுக்கு பாலஸ்தீனத்தில் ஒரு தேசியத் தாயகம்   ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை இங்கிலாந்து அரசு ஆதரிக்கிறது எனக் கூறப்பட்டது.
1930 – ஹைலி செலாசி எதியோப்பியாவின் பேரரசன் ஆனான்.
1936 – இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி ரோம்-பேர்லின் அச்சு என்ற அச்சு அணியை அறிவித்தான்.
1936 – பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்தது.
1936 – கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது.
1953 – பாகிஸ்தான், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1963 – தெற்கு வியட்நாம் அதிபர் நியோ டின் டியெம் Ngo Dinh Diem இராணுவப் புரட்சியை அடுத்து கொலை செய்யப்பட்டார்.
1974 – தென் கொரியத் தலைநகர் சியோலில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர்.
2000 – பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக விண்வெளி வீரர்கள் சென்றடைந்தனர்.
2006 – ஈழப்போர்: கிளிநொச்சி வைத்தியசாலை சுற்றவுள்ள பகுதிகளில் இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2007 – இலங்கை வான்படையின் வான்குண்டுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
1795 – ஜேம்ஸ் போக், ஐக்கிய அமெரிக்காவின் 11வது அரசுத் தலைவர் (இ. 1849)
1815 – ஜார்ஜ் பூல், ஆங்கிலேயக் கணிதவியலாளர், (இ. 1864).
1965 – ஷாருக்கான், இந்தி நடிகர்
இறப்புகள்
1903 – பரிதிமாற் கலைஞர் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகள், தமிழறிஞர் (பி. 1870).
1917 – ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் (பி. 1858).
1950 – ஜோர்ஜ் பேர்னாட் ஷா, ஐரிஷ் எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவரும் (பி. 1856).
1966 – பீட்டர் டெபாய், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1884)
1978 – ஏ. பெரியதம்பிப்பிள்ளை, மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழறிஞர் (பி. 1899)
2007 – சு. ப. தமிழ்ச்செல்வன், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் (பி. 1967)
சிறப்பு நாள்
மொரீசியஸ் – இந்தியர்கள் வருகை நாள் (1834)
கல்லறை திருநாள்

No comments:

Post a Comment

Adbox