"

Thursday, October 17, 2019

14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பஜாஜ் `சேட்டாக்' !





நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் நிறுவனம் `சேட்டாக்' என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகப்படுத்தினார்.


பஜாஜ் என்றாலே நம் நினைவுக்கு வருவது `சேட்டாக்' ஸ்கூட்டர் தான். உடனடியாக ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டும் என்றால், 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் சோனியா அகர்வாலை ஏற்றிக்கொண்டு அவர் அப்பா செல்லும் பைக்தான் சேட்டாக். முன் உள்ள சீட் சற்று உயரமாகவும் பின்னாடி ஒரு ஸ்டெப்னி வீல் வைத்து வரும் சேட்டாக் 1960களில் மிக டிரெண்டாக இருந்தது. கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் வரை சந்தையை ஆண்ட ஒரு ஸ்கூட்டர் என்றால் சேட்டாக்தான். அந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம்பிடித்த ஸ்கூட்டரின் விற்பனையை நிறுத்தி கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் ஆகிறது. தற்போது புதிய வடிவத்தில், புதிய தோற்றத்தில், புதிய தொழில்நுட்பத்தில் மீண்டும் சந்தைக்கு வர இருக்கிறது சேட்டாக்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக வந்திருக்கும் சேட்டாக், பல்வேறு புதிய அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 4 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதில் லித்தியம்- அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஸ்போர்ட்ஸ் மோடில் மணிக்கு 85 கி.மீ., வேகத்திலும் எகோ மோடில் மணிக்கு 95 கி.மீ., வேகத்தில் செல்லும் என்று பஜாஜ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதன் பேட்டரி மிக வேகமாக ரீசார்ஜ் ஆகும் வகையில் டிசி பாஸ்ட் சார்ஜிங் வசதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் எவ்வளவு பேட்டரி இருக்கிறது, நாம் சென்ற பயணங்களின் விவரங்கள் என அனைத்தையும் பஜாஜ் நிறுவனம் வாடிக்கையாளருக்கு வழங்க இருக்கிறது.

சேட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் உத்தேசமாக 90,000 ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment

Adbox