"

Tuesday, August 20, 2019

கூகுள் மேப்பில் இருக்கும் மிக முக்கியமான 3 அம்சங்கள்... இக்கட்டான காலங்களில் நிச்சயம் உதவும்

கூகுள் நிறுவனம் மக்களின் தேவைகளை உணர்ந்து தேவையான பல்வேறு புதிய வசதிகளை அதில் உருவாக்கி வருகிறது.  


கூகுள் மேப் ஒரு சாலையை நேரில் எப்படி காண்பீர்களோ அதே போன்று போன்களின் கேமரா ஃபீட்கள் மூலம், உண்மையான சாலையை மேப்பில் பார்க்க இயலும். தேவையில்லாமல் காதைச் சுற்றி மூக்கைத் தொடும் கதையாக உங்களின் பயணம் இருக்காது. traditional navigation button - க்கு மிக அருகில் இதற்கான பட்டனை க்ளிக் செய்து நீங்கள் ஆகுமெண்டட் ரியாலிட்டியில் மேப்பை காணலாம். ஆனால் நீங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு 'மூவ்' ஆகிக் கொண்டிருக்கும் போது தான் இந்த ஆப்சனை உங்களால் பெற இயலும்.


நீங்கள் ஏதாவது உணவகங்களில் உணவு சாப்பிட செல்கின்றீர்கள் என்றால், அந்த உணவகத்தின் சிறந்த உணவுகள் எது என்பதை, அங்கு வரும் வாடிக்கையாளர்களின் ரிவியூ மூலமாக எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் கூகுள் புதிய அப்டேட்களை தந்துள்ளது.



நீங்கள் செல்லும் பாதையில் இருக்கும் போக்குவரத்து நெரிசல், எவ்வளவு நேரத்தில் நீங்கள் அங்கிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இயலும் போன்ற விசயங்களை மிகவும் தெளிவாகவும், துல்லியமாகவும் அறிவிக்கிறது. இதனால் உங்களின் பயணத்தை மிக வேகமாகவும், முன்கூட்டியேவும் திட்டமிட இயலும்.

No comments:

Post a Comment

Adbox