தேவையானவைஆலிவ் எண்ணெய் - 2 மேசைக்கரண்டிஷீடாக் காளான் -10 முதல் 15 (நறுக்கியது)பூண்டு - 5 பல் (நசுக்கியது)இஞ்சி - 1 அங்குல துண்டு (நசுக்கியது)உலர்ந்த ஏஞ்சலிக்கா வேர் - 1 தேக்கரண்டி (பொடித்தது)அஸ்ட்ராகாலஸ் வேர் (உலர்ந்தது) -2 தேக்கரண்டிஎலுமிச்சைப் புல் (உலர்ந்தது) - 1 மேசைக்கரண்டிநீர் - (2.5 லிட்டர்)பார்ஸ்லே இலை - 2 தேக்கரண்டிகடல் உப்பு மற்றும் மிளகு - சுவைக்காக தேவையான அளவுஎலுமிச்சை சாறு -2 தேக்கரண்டி
பெரிய பாத்திரத்தில் ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தவும்.பின்னர் காளான், பூண்டு, இஞ்சி, ஏஞ்சிலிக்கா, அஸ்ட்ராகாலஸ் மற்றும் எலுமிச்சைப் புல் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் சூடுபடுத்தவும். பின்னர் நீர் சேர்த்து இந்தக் கலவை கொதிக்குமளவுக்கு சூடாக்கவும்.கொதிநிலையை எட்டாமல் 15 முதல் 20 நிமிடங்கள் வரை மிதமாக சூடாக்கவும். வேர்கள் மிருதுவாகும்வரைக்கும் சூடாக்கவும்.இறுதியில் பார்ஸ்லே இலை, உப்பு, மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும். இந்த சூப் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவும்.
No comments:
Post a Comment