"

Sunday, April 14, 2019

வரலாற்றில் இன்று ஏப்ரல் 14 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்


வரலாற்றில் இன்று ஏப்ரல் 14 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.


நிகழ்வுகள்
1699 – கால்சா என்ற சீக்கிய அறப்படை இயக்கத்துக்கு குருகோவிந்த் சிங் அடிக்கல் நாட்டிய நிகழ்வு இடம்பெற்றது.
1828 – நோவா வெப்ஸ்டர் தனது அகராதியின் முதலாவது பதிவுக்கான காப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்.
1849 – ஹங்கேரி ஆஸ்திரியாவிலிருந்து விடுதலையை அறிவித்தது.
1865 – அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஜோன் வில்க்ஸ் பூத் என்பவனால் சுடப்பட்டார்.
1894 – தொமஸ் எடிசன் ஒளிப்படங்களைப் பாவித்து அசையும் படக்காட்சியை காட்டும் கினட்டஸ்கோப் (kinetoscope) என்ற அசையும் ஒளிப்படக்கருவியை காட்சிப்படுத்தினார்.
1912 – பிரித்தானியாவின் பயணிகள் கப்பல் டைட்டானிக் வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது. அடுத்த நாள் இது 1,503 பேருடன் கடலில் மூழ்கியது.
1915 – துருக்கி ஆர்மீனியாவை முற்றுகையிட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய கடற்படையினர் நோர்வேயின் நம்சோஸ் என்ற இடத்தில் தரையிறங்கினர்.
1944 – பம்பாய் துறைமுகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1958 – சோவியத்தின் ஸ்புட்னிக் 2 என்ற செய்மதி 162 நாட்கள் பூமியைச் சுற்றிய பின்னர் சுற்று வட்டத்தில் இருந்து வீழ்ந்தது.
1978 – ஜோர்ஜியாவில் ஜோர்ஜிய மொழியின் அரசியல் அந்தஸ்தை மாற்றும் சோவியத் ஆட்சியாளரின் முயற்சிக்கெதிராக திபிலீசியில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
1986 – மேற்கு பெர்லினில் ஏப்ரல் 5 இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு அமெரிக்கப் படைவீரர் இறந்ததற்குப் பழி வாங்கும் முகமாக அதிபர் ரொனால்ட் ரேகன் உத்தரவின் பேரில் ஐக்கிய அமெரிக்கா லிபியாவில் குண்டுவீச்சை நிகழ்த்தியதில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

1986 – வங்காள தேசத்தில் 1 கிகி எடையுள்ள பனிக்கட்டி மழை பொழிந்ததில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
1988 – சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவில் ஐநா அவையில் இடம்பெற்ற நிகழ்வில் சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறும் உடன்பாட்டில் கைச்சாத்திட்டது.
1999 – யூகொஸ்லாவியாவில் நேட்டோ படைகள் அல்பேனிய அகதிகளை ஏற்றிச் சென்ற ஊர்தி ஒன்றின் மேல் குண்டுவீச்சு நடத்தியதில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
1999 – அவுஸ்திரேலியா, சிட்னியில் பலமான பனிக்கட்டி மழை பொழிந்ததில் A$ 1.7 பில்லியன் பெறுமதியான சேதம் ஏற்பட்டது.
2007 – தாய்லாந்து நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 35 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்
1126 – இப்னு றுஷ்து, எசுப்பானிய மருத்துவர், மெய்யியலாளர் (இ. 1198)
1629 – கிறித்தியான் ஐகன்சு, டச்சு கணிதவியலாளர் (இ. 1695)
1891 – அம்பேத்கர், இந்திய சட்ட நிபுணர் (இ. 1956)
1919 – சம்சாத் பேகம், இந்தியப் பாடகி (இ. 2013)
1922 – அலி அக்பர் கான், இந்துஸ்தானி இசைக் கலைஞர் (இ. 2009)
1927 – பி. ஏ. பெரியநாயகி, திரைப்படப் பின்னணிப் பாடகி, கருநாடக இசைப் பாடகி (இ. 1990)
1935 – எரிக் வான் டேனிகன், சுவிட்சர்லாந்து எழுத்தாளர்

இறப்புகள்
1759 – ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல், செருமானிய-ஆங்கிலேய இசையமைப்பாளர் (பி. 1685)
1904 – வைமன் கு. கதிரவேற்பிள்ளை, ஈழத்து நீதிபதி, அகராதி தொகுத்தவர் (பி. 1829)
1950 – இரமண மகரிசி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி (பி. 1879)
1962 – மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா, இந்தியப் பொறியியலாளர் (பி. 1860)

1963 – ராகுல சாங்கிருத்யாயன், இந்திய மதகுரு, வரலாற்றாளர் (பி. 1893)
1964 – ரேச்சேல் கார்சன், அமெரிக்க உயிரியலாளர் (பி. 1907)
1986 – சிமோன் ட பொவார், பிரெஞ்சு மெய்யியலாளர் (பி. 1908)
2013 – பி. பி. ஸ்ரீனிவாஸ், இந்திய திரைப்பட பின்னணிப் பாடகர் (பி. 1930)

சிறப்பு நாள்
உலக சித்தர்கள் நாள்.

No comments:

Post a Comment

Adbox