"

Wednesday, March 20, 2019

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் கடுகு எண்ணெயும், அதன் நற்பலன்கள் என்ன என்று தெரியுமா?

mustard-oil-benefits

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்கள். சின்னஞ்சிறிய கடுகில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. 



இதில் உயர்தர சத்துக்களும்,தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. வைட்டமின்களும், ஆன்டிஆக்ஸிடென்ட்களும் அடங்கியுள்ளன. கடுகில் உள்ள சல்பர், அப்லோ டாக்ஸின் போன்றவை நச்சுத்தன்மையை நீக்குகிறது. நம் அன்றாட உணவில் பல வகையான எண்ணெய்களை பயன்படுகிறோம். சிலர் மட்டுமே மிகவும் குறைந்த அளவில் பயன்படுத்தும் எண்ணெய்யாக கடுகு எண்ணெய் இருக்கிறது. இந்த கடுகு எண்ணெய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். 

கடுகு ஜீரணத்திற்கு உதவுகிறது. தினமும் காலையில் கடுகு, மிளகு, உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து உட்கொள்ளவேண்டும். பின்னர் ஒருடம்ளர் வெந்நீர் அருந்த பித்தம், கபம் போன்றவற்றால் ஏற்படும் உபாதைகள் நீங்கும்.செரிமான சக்தி பலருக்கும் தாங்கள் சாப்பிடும் உணவுகளை சரியாக செரிமானம் செய்ய முடியாத நிலை இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் கடுகு எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவு பொருட்களை அவ்வப்போது சிறிதளவு சாப்பிடுவதால் வயிறு, குடல் போன்றவை நன்கு சுத்தமாகி செரிமானமின்மை மற்றும் குடல் சம்பந்தமான பல்வேறு நோய்கள் நீங்க பெறுவார்கள்.


சருமத்துக்கு கடுகு எண்ணெய் ரசாயனம் கலக்காத இயற்கையான சன் ஸ்கிரீனாகப் பயன்படுகிறது. சருமத்தின் நிறத்தை மெருகூட்டுவதோடு, கரும்புள்ளிகளையும் நீக்கும். கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் கலந்து, உடல் மற்றும் முகத்தில் தடவி, நன்கு மசாஜ் செய்து குளித்துவர சருமம் மென்மையாகவும் பளபளப்புடனும் திகழும். சொரியாசிஸ் தோலில் இருக்கும் செல்களில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களாலும், பரம்பரை காரணத்தாலும் சிலருக்கு சோரியாசிஸ் எனப்படும் நோய் ஏற்படுகிறது. இக்குறைபாட்டை குறைப்பதில் கடுகு எண்ணெய் சிறப்பாக செயல்படுகிறது. இரவில் படுக்கும் முன் வேப்ப எண்ணெயை மற்றும் கடுகு எண்ணெய் கலந்து தடவி, காலையில் எழுந்ததும் சுத்தமாக கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து பின்பற்றி வந்தால் சொரியாசிஸ் பிரச்சனையை குணப்படுத்தலாம்.

தலைமுடி தலைமுடி ஆரோக்கியமாக இருப்பது அவசியம். கடுகு எண்ணையை தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் நன்கு ஊறிய பின்பு குளிக்க வேண்டும். மூன்று வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வந்தால் நெடு நாட்களாக இருக்கும் ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்கும். கடுகு எண்ணெயை கூந்தலுக்கு தடவினால், கூந்தல் வறட்சியின்றி பொலிவோடு காணப்படும். அதிலும் இந்த எண்ணெயை ஸ்கால்ப்பில் தடவி, ஒரு துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து தலையில் சுற்றி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால், எண்ணெயானது தலையில் நன்கு உறிஞ்சப்படுவதோடு, குளித்தப் பின் வறட்சியில்லாமல் இருக்கும்.

சைனஸ் என்பது நமது மூக்கு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஜலதோஷம் பீடிக்கும் போது சேர்ந்து கொள்ளும் ஒரு திரவ நிலையில் இருக்கும் கோழை ஆகும். இந்த சைனஸ் தொல்லை நீங்க தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் கடுகு எண்ணெயின் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.தேனில் கடுகை அரைத்து கொடுக்க ஆஸ்துமா, கபம் குணமடையும். கடுகு, மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிக்காதில் சில சொட்டுக்கள் விட தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும். வெந்நீரில் கடுகை ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் நீங்கும்.


கடுகு எண்ணையை அடிக்கடி உணவில் சாப்பிடுபவர்களுக்கு இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். கடுகு எண்ணெய்யில் நல்ல கொலஸ்ட்ரால்கள் அதிகமாக உள்ளது. மேனோசேச்சுரேட் மற்றும் பாலிசேச்சுரேட் கொழுப்புகள் இதில் காணப்படுகின்றன. எனவே இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து நம் உடலில் நல்ல கொழுப்புகளை கூட்டுகிறது. மேலும் இதில் உள்ள ஓமேகா 3 மற்றும் ஓமேகா 6 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

அடிபட்டு ரத்தம் ஏற்பட்ட இடத்தில் கடுகை அரைத்து பற்றுபோட ரத்தக்கட்டு மறையும். கை, கால் மூட்டுக்களில் வலி ஏற்பட்டால் கடுகு பற்று நிவாரணம் தரும். கை, கால்களில் சில்லிட்டு விரைத்து போனால் அந்த இடங்களில் கடுகை அரைத்து பற்று போட வெப்பம் உண்டாகி இயல்பு நிலை ஏற்படும்.கடுகு எண்ணெய் ஒரு சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது. மூட்டு வலி மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் வாத நோய் மற்றும் ஆர்த்ரிடீஸ் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.

No comments:

Post a Comment

Adbox