"

Friday, February 22, 2019

இன்றய நாள் இதுவரை முக்கிய செய்திகள் தொகுப்பு ஓர் லைவ் அப்டேட் - பிப்ரவரி 22


தன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று தொண்டர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தலைவரும் தந்தையுமான கலைஞரிடமும், அன்னையார் தயாளு அம்மையாரிடமும் தாள் வணங்கி வாழ்த்துப் பெறுவது வழக்கம். இந்த ஆண்டு தலைவர் கலைஞரின் வாழ்த்துகளை நேரில் பெற முடியாதபடி, இயற்கையின் சதி அமைந்துவிட்ட நிலையில், பிறந்தநாள் நிகழ்வுகள் அவசியமற்றவை என்பதே என் முடிவு என கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் விரைவாக உடல்நிலை தேறிவந்து நாட்டுக்கும் மக்களுக்கும் விஜயகாந்த் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார். கலைஞர் கருணாநிதி மீது அளவுகடந்த பாசம் கொண்டவர் விஜயகாந்த் என்றும், அரசியல் பேசுவதற்காக நான் வரவில்லை என்றும், உடல்நிலை பற்றி தான் விசாரித்தேன் என்று தெரிவித்தார்.



தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் பாராளுமன்ற தேர்தல் விருப்ப மனுக்களை 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 11 மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 6-ந்தேதி (புதன்கிழமை) மாலை 5மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தே மு தி கா தலைவர் அறிவிப்பு.

கா‌ஷ்மீர் மாநிலம் புலவாமாவில் துணை ராணுவ படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 பேர் இறந்தனர்.இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்‌ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தான் காரணம் என இந்தியா குற்றம் சாட்டியது.இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக கூறினார். இந்தியா போர் தொடுத்தால் தாக்குதலுக்கு தயாராக உள்ளதாக பாகிஸ்தானும் தெரிவித்தது. 


சத்தீஸ்கர்  மாநிலம் ஜக்தல்பூரில் உள்ள சிறு உணவக உரிமையாளர், பாகிஸ்தான் எதிர்ப்பை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி உள்ளார். தள்ளுவண்டியில் வைத்து சிக்கன் வறுவல் வியாபாரம் செய்து வரும் அவர், ‘பாகிஸ்தான் ஒழிக’ என கூறும் வாடிக்கையாளர்களுக்கு சிக்கன் லெக் பீசில் 10 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “மனிதநேயத்தை பாகிஸ்தான் ஒருபோதும் மதிப்பதில்லை. மதிக்க விரும்புவதும் இல்லை. அதனால்தான், பாகிஸ்தான் ஒழிக என அனைவரும் சொல்ல வேண்டும் என்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளேன்’ என்றார். 




பாம்பன் பகுதி மீனவர்கள் 5 பேர் ஆழ்கடலில் மீன்பிடித்தபோது, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 5 பேரும்  ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்தவர்கள். 

சவுதி இளவரசர் சல்மானுக்கு முகமது பின் இந்தியா வந்து பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள கூடுதலாக 25,000 இந்தியர்களுக்கு சவுதி அரசு அனுமதி அளித்துள்ளது.  


சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க இந்தியா மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் இந்தியா உடனான அனைத்து கலந்துரையாடல்களையும் ரத்து செய்து சர்வதேச ஒலிம்பிக் குழு உத்தரவிட்டுள்ளது.

முதுகுவலி காரணமாக  இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரில் இருந்து ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளார். அதற்கு பதிலாக ரவீந்திர ஜடஜா அணியில் இடம் பெறுகிறார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரோலியா அணி 2 டி20, 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. 


போலி நர்சிங் கல்லூரிகளை கண்டறிய முடியாததால் அங்கு பயிற்சி முடித்து நூற்றுக்கணக்கான மாணவிகள் தங்கள் சான்றிதழை வைத்து செவிலியர்களாக பதிவு செய்ய இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காகவும், அதற்கு சதித்திட்டம் தீட்டியவர்களை அடையாளம் கண்டு தண்டிப்பதற்காகவும் இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா உள்ளிட்ட 15 நாடுகளின் கூட்டமைப்பான ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், புல்வாமா தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Adbox