நெகிழி என அழைக்கப்படும் பிளாஸ்டிக் தற்சமயம் தமிழக அரசால் முழுவதுமாக பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட ஒரு பொருள்.
பிளாஸ்டிக் உலகில் மிக பெரிய அச்சுறுத்தலாக காணப்படும் பொருள்களில் ஒன்றாகும். இது சுற்றுசூழல் மாசுபடுத்துவதோடு இல்லாமல் விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நெகிழி என அழைக்கப்படும் இந்த பிளாஸ்டிக் "பிளாஸ்டிக்கோஸ்" என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து உருவானது. அதாவது எளிதில் வளைந்து கொடுக்கக்கூடிய ஒரு பொருள் என்பது இதன் அர்த்தமாகும். இன்று உலகம் முழுவதும் சுமார் 2 மில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப் பட்டு மக்காத குப்பைகளாக வெளியேறி வருகின்றனர்.
இந்த பிளாஸ்டிக் சுற்றுச்சூழல் மாசுபடுதல் உயிரினங்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்பது மறுக்க முடியாது. தற்சமயம் விஞ்ஞானிகள் ஒரு தீர்வை கண்டறிந்துள்ளனர். அதில் பிளாஸ்டிக்குகளை உயிரியல் முறையில் முழுவதுமாக அழித்து விட முடியும் என்பதை உலகிற்கு தெரிவித்துள்ளனர். அதுவும் புழுக்களின் உதவியால் அவற்றை சரி செய்துவிட முடியும்.
உலகில் வாழக்கூடிய பல ஜீவராசிகள் ஒவ்வொன்றையும் சார்ந்து வாழக்கூடியதாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட வகை புழுக்கள், மெழுகுப்புழு என அழைக்கப்படும் கேட்டர்பில்லர். இந்த புழுவை தற்செயலாக உயிரியல் பேராசிரியர் ஆன பெட்ரிக்கா பெர்டோச்சினி (Federica Bertocchini ஸ்பெயினில் காந்தாபிரியா பல்கலைக்கழகம்) என்பவர் இந்த மெழுகுப்புழுகளை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு போட்டுவைத்திருந்தார் சிறிது நேரம் கழித்து அந்த பிளாஸ்டிக் பைகள் சிறிது சிறிதாக சிதிலமடைந்து காணப்பட்டது.
அதிலிருந்து ஒரு உண்மையைக் கண்டறிந்தார் பிளாஸ்டிக் பைகளை ஜீரணம் செய்யக்கூடிய தன்மை கேட்டர்பில்லர் புழுவில் உள்ளது. இது வேதி பிணைப்பை உடைக்கும் திறனுடைய மூலக்கூறுகளை அதன் உடலில் கொண்டுள்ளது என்பதை புரிந்து கொண்டனர். பின்னர் ஆய்வுக்கூடத்தில் நூறு மெழுகுப்புழுகளை பயன்படுத்தி பிளாஸ்டிக்குகள் முழுவதும் சேதமடைவதை அறிந்தார்.
மேலும் இவர்களது ஆராய்ச்சியானது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர்களின் கூற்றுப்படி இந்த கேட்டர்பில்லர் அதன் உடலில் ஜீரணம் செய்யக்கூடிய வேதியல் நொதி மற்றும் அதன் உடல் அமைப்பின் செயல்பாடுகளை முழுவதுமாக கண்டறிந்து விட்டால் உலகில் உள்ள பிளாஸ்டிக்குகளை எளிதாக அழித்து விட முடியும் என உலகிற்கு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment