கரிசலாங்கண்ணி, வெண்கரிசாலை அல்லது கையாந்தகரை (Eclipta prostrata) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி.
கரிசலாங்கண்ணி ஞான மூலிகை என போற்றப்படுகிறது. மூலிகைகளில் கரிசலாங்கண்ணி தேசசுத்தி மூலிகை என பாராட்டப்படுகிறது. வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனப்படுகிறது. கையாந்தரை, கரப்பான், கரிசாலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அருமையான மருத்துவக் குணம் கொண்ட காய கல்ப மூலிகை.
கரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துக்கள்:
நீர்=85% மாவுப்பொருள்=9.2% புரதம்=4.4% கொழுப்பு=0.8% கால்சியம்=62 யூனிட் இரும்புத் தாது=8.9 யூனிட் பாஸ்பரஸ்=4.62% இவை அனைத்தும் 100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள்.
‘உணவே மருந்து!’ என்ற சொல்லா எதை உண்கிறோமோ அதுதான் நமது உடலாக மாறி நம்மை ஜீவிக்க வைக்கிறது. அன்றாட வாழ்வில் உணவாகவே இருந்து வந்துள்ளன. அப்படிப்பட்ட ஒரு அற்புத தாவரம்தான் கரிசலாங்கண்ணி கீரை.வெள்ளை, மஞ்சள், நீலம், சிவப்பு என பூக்களின் நிறங்களின் அடிப்படையில் நான்கு வகையான கரிசலாங்கண்ணி செடிகள் இருந்துவந்துள்ளன.
சிவப்பு மற்றும் நீல பூப்பூக்கும் கரிசலாங்கண்ணி செடிகள் கிட்டத் தட்ட அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது.மஞ்சள் கரிசலாங்கண்ணியை உணவில் சேர்த்து வரும்போது நமது ஆன்ம பலம் பெருகுவதோடு உடற்கழிவுகள் வெளியேறி கண்ணொளி பிரகாசிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவக் குணங்கள்:
உடல் கசடுகள் விரைந்து விலகி தேகம் சுத்தம் பெறும். கெட்ட பித்த நீர் விலகி காய்ச்சல் குறையும். உடல் வசீகரம் பெறும். ஆயுள் நீடித்து உடல் வளம் பெறும். புற்று நோய் கிருமிகளை வளர விடாமல் வைத்திருக்கும். ஈரல், மண்ணீரல் வீக்கம் குறைந்து மஞ்சள் காமாலையிலிருந்து குணம் கிட்டுகிறது. விரைந்து வரும் மூப்பை தடுத்து நிறுத்தி தோல் பிணிகளை குணமாக்கும்.
நுரையீரல் சளியையும் மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை நீக்கவல்லது. ஒரு பிடி இலைகளை, 200 மி.லி. தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தேய்த்துவர முடி கருமையடைய.
கீரையை சுத்தம் செய்து, காய வைத்து பொடி செய்து தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறம் பெறும்.
தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யில், தேவையான அளவு கரிசலாங்கண்ணி சாறு கலந்து காய்ச்சி வடிகட்டி, தலையில் தேய்த்து வர தலைமுடி நன்றாக வளரும்.
கரிசலாங்கண்ணி பொடியுடன் தூதுவளை பொடியையும் சேர்த்து மூலிகை டீ தயாரிக்கலாம். இந்த டீயை குடித்தால் வியாதி வராமல் தடுக்கும். பருவ காலங்களில் வரக்கூடிய தொற்று நோய்கள் அணுகாது.
ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கரிசலாங்கண்ணி தூள் சிறிதளவு கலக்கவும். அதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்தால், சூப் ரெடி. இத்துடன் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி, தக்காளி சேர்த்தால் சுவையாக இருக்கும்.
கரிசலாங்கண்ணி பொடி 75 சதவீதம், கிராம்பு, கருவேலம்பட்டை, கடுக்காய், சுக்கு, வாய்விளங்கம், மாசிக்காய், ஆலம் விழுது, எலுமிச்சம் பழம், இந்துப்பு ஆகிய பொருட்களை சேர்த்து பொடி செய்தால், பல்பொடி தயார். இதை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யலாம். இந்த பல்பொடியை உபயோகித்தால் பல் நோய்களே வராது.
No comments:
Post a Comment