"

Sunday, February 10, 2019

பணத்தை நூதன முறையில் திருடும் திருட்டுகள் தற்பொழுது அதிகரித்து வருகிறது என்பதே புது செய்தி.




மொபைல் எண்ணிற்குப் போலி ஹேக்கிங் லிங்க்களை அனுப்பி வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் பணத்தை திருடிய சம்பவம் ஒன்று தற்பொழுது நடந்தேறியுள்ளது.


குறுகிராம் பகுதியில் உள்ள 52 வயது நிரம்பிய தொழிலதிபரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.60,000 அவருக்கே தெரியாமல் திருடப்பட்டுள்ளது.வருமான வரி துறை அதிகாரிபோல் தன்னை போனில் தொடர்புகொண்ட, தொழிலதிபரின் மொபைல் எண்ணிற்குப் போலி லிங்க் ஒன்றை அனுப்பி, மூன்றாம் நபர் செயலி ஒன்றையும் டவுன்லோட் செய்யச் சொல்லி இருக்கிறார். அதனைப் பின்பற்றி செயலியை டவுன்லோட் செய்த நபரின் கணக்கிலிருந்து 

மெசேஜ் இல் வந்த போலி லிங்க்கை கிளிக் செய்ததும், ஆட்டோமேட்டிக்காக மூன்றாம் நபர் செயலி அவரின் மொபைல் இல் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இரவு 2.30 மணிக்கு ஓ.டி.பி. எண் அவர் மொபைல் எண்ணிற்கு வந்துள்ளது. வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள அவரின் எண்ணிற்கு வந்த ஓ.டி.பி எண்கள் ஹேக்கர்களுக்கும் அந்தச் செயலி மூலம் சென்றுள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.வெறும் ஒரே ஒரு போலி லிங்க் பயன்படுத்தி, அவருக்கு வந்த ஓ.டி.பி எண்களை ஹேக் செய்து இரண்டு ஒன்லைன் பரிவர்த்தனை மூலம் ரூ.60,000 திருடப்பட்டுள்ளது. 

மெசேஜ் இல் வந்த ஒரு போலி லிங்க்கை கிளிக் செய்ததினால் அவரின் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.வங்கி ஊழியர், வருமான வரி துறை அதிகாரி, காவல்துறை அதிகாரி என யாரும் உங்களைத் தொடர்பு கொண்டு உங்களின் வங்கி விபரம் அல்லது வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் விபரம் மற்றும் சந்தேகப்படும்படியான போலி லிங்க் என எதையும் நம்பி உங்களின் தகவல்களை பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

Adbox