"

Sunday, February 24, 2019

வயிற்றுப்புண்,வயிறு எரிச்சல் மற்றும் வாய் புண் குணமாக மிகச் சிறந்த வீட்டு வைத்திய மருத்துவ முறைகள்.

தினந்தோறும் நாம் உண்ணும் உணவில் மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளாத தவிர்த்துவிட்டால் நம் வயிற்றுப் பகுதிகளில் அதிகளவு அமிலம் சுரப்பு  ஏற்பட்டு வயிற்று எரிச்சல் மற்றும் வயிற்று புண்ணை ஏற்படுத்திவிடும்.


சில நேரங்களில் குறிப்பிட்ட வகை உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வது  நம் வயிற்று செரிமானக் குறைபாடு வயிற்றுப்புண் வயிற்று எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்திவிடும். இரைப்பை ஒரு மெல்லிய சவ்வு போன்ற தன்மையை உடையது. தொடர்ச்சியாக ஒரே சீரான அமிலத்தன்மையுடைய உணவையோ அல்லது காரத்தன்மையுடைய உணவு எடுத்துக் கொள்ளும் போது உடலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்ணை சரி செய்வதற்கு நம் சமையல் அறைகளில் உள்ள பொருட்களைக் கொண்டு மிக எளிதாக இதனை சரிசெய்யலாம்.


மணத்தக்காளி கீரையை  சூப் செய்தோ இல்லை என்றால் பொரியல் செய்தோ வாரத்திற்கு மூன்று நான்கு தடவை சாப்பிட்டு வந்தால் விரைவில் அல்சர் குணமாகிவிடும்.மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப்புண் மற்றும் அல்சர் விரைவாக குணம் ஆகும்.

ஒரு பங்கு அத்திப்பட்டை சாரும் ஒரு பங்கு  பசும் பாலும் சம அளவு  சேர்த்து பண கற்கண்டு போட்டு குடித்து வந்தால் வயிற்று புண் மற்றும் வாய் புண் அனைத்தும் குணமாகும்.


தேங்காய்ப் பாலை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புண் குணமாக அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் கொப்பரைத் தேங்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தாலும் அல்சர் குணமாகும்.

புழுங்கல் அரிசியில் சாதம் வடித்த கஞ்சியை வயிற்றுப்புண் உள்ளவர்கள் குடித்து வந்தாலே நல்ல குணம் கிடைக்கும்.

நெல்லிக்காய் ஜூஸில் தயிரை சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

அல்சருக்கு அகத்திக்கீரை மிகவும் சிறந்தது ஒரு கப் அகத்திக் கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் அல்சர் சீக்கிரமாக குணமாகும்.


மாட்டிறைச்சி, பிரட் மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை அல்சர் இருப்பவர்கள் உண்டால் அது செரிமான மண்டலத்தை பாதிக்கும் எனவே அல்சர் இருப்பவர்கள்முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள வேண்டும்

No comments:

Post a Comment

Adbox