"

Friday, February 15, 2019

இன்றய நாள் இதுவரை முக்கிய செய்திகள் தொகுப்பு ஓர் லைவ் அப்டேட் பிப்ரவரி 16 இன்று நடைபெற முக்கிய தகவல்கள்

விளம்பி வருஷம் -உத்தராயணம் -சிசிரருது 16 February 2019  மாசி - 04 சனிக்கிழமை

அமெரிக்காவில் 2 மாதமாக சிகிச்சை பெறுவதற்காக சென்றிருந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.




காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் சாயிஷாவுடனான திருமணத்தை உறுதி செய்தார் நடிகர் ஆர்யா. அவர் பதிவிட்டுல ட்விட்டில் இருவீட்டார் சம்மதத்துடன் வரும் மார்ச் மாதம் திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்துள்ளார்.


* முற்றிலும் அழிந்து போனதாக கூறப்பட்ட பிளாக் பாந்தர் இனத்தில் ஒரு சிறுத்தை, புகைப்பட கலைஞரின் காமிராவில் சிக்கியிருப்பது ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த அரிய கருஞ்சிறுத்தையை படம் எடுத்தவர் பர்ராட்-லூகாஸ் என்ற பிரிட்டிஷ் வனவிலங்கு புகைப்பட கலைஞர் எடுத்த புகைப்படத்தில் இந்த அரிய வகை பிளாக்பாந்தர் சிக்கியுள்ளது.


* 12-ஆம் வகுப்பு முடிக்கும் மாணவ, மாணவியரின் வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், வரும் கல்வியாண்டு முதல் 12 புதிய பாடப் பிரிவுகள் இணைக்கப்பட உள்ளதாகத் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

* காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இளைஞர்களை கவரும் வகையில் வாக்குறுதிகள் இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. நகர்ப்புற பட்டதாரி இளைஞர்களுக்கு 100 நாட்கள் வேலை உத்தரவாதம், எல்கேஜி முதல் பட்டமேற்படிப்பு வரை பெண்களுக்கு இலவச கல்வி, நிதி பற்றாக்குறை இன்றி பார்த்துக் கொள்வது, மாணவர்கள் உரிமை ஆணையம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு என கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


* சர்வதேச முதலீட்டு வங்கியான கிரெடிட் ஸ்யூஸி தரப்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்ற 117 மக்களவை தொகுதிகளில், வரும் தேர்தல் அக்கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

* அண்ணா பல்கலைக்கழகத்தில் 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு செப்டம்பர் 20 முதல் 22-ம் தேதி வரை 3 நாட்கள் நடை பெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றமும், அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இம்மாநாட்டில் தானியங்கி கருவிகளில் தமிழ்மொழி பயன்பாடு என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


* காஷ்மீர் புல்வாமா பகுதியில், நேற்று மாலை தீவிரவாதிகள் தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் வரு மரணம் அடைந்தனர்.  தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா உடனடியாக டெல்லி திரும்புமாறு மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு பிரதமர் மோடி ராணுவத்திற்கு பதிலடி தர முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். பிரதமர் கூறுவதை பார்க்கும் போது ஏற்கனவே, உரி தாக்குதல் சம்பத்தை போன்று மீண்டு நம் ராணுவம், சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


* சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மத்தியில் லோக்பால், மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார். கடந்த 5-ந்தேதி இதேகோரிக்கைக்காக நடத்திய உண்ணாவிரதத்தை கைவிட்டார். இந்நிலையில்  அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் வயது முதுமையால் உடல் உறுப்புகளில் சில பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த வருடத்திற்கான இரானி கோப்பை கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விதர்பா மற்றும் ரெஸ்ட் ஆப் இந்திய அணியினர் கையில் கருப்பு கைப்பட்டை அணிந்து விளையாடினர். 

* ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை, மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பணியில் சேர்க்க பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இயற்றப்பட்டுள்ள  தனியுரிமைச் சட்டத்தின் படி மிக எளிமையான பாஸ்வேர்ட் வைக்க கூடாது. காரணம் இப்படிப்பட்ட எளிமையான பாஸ்வேர்ட் தான் பின்னாளில் மிக சுலபாக ஹேக்கர்களால் கண்டறியப்படுகிறது.




No comments:

Post a Comment

Adbox