"

Wednesday, February 13, 2019

விண்வெளியில் 135 கோடியில் கழிவரை ஆய்வு கூடம் அமைத்து நாசா ஆய்வு


கடந்த 2015 ஆம் ஆண்டு, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் விண்வெளி வீரர் ஆன ஸ்காட் கெல்லி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் "முதன்முதலாக" ஒரு முழுமையான ஆண்டை கழிக்கும் ஸ்பேஸ் மிஷனிற்காக விண்வெளிக்குள் சென்றார். அது இயற்கையாக சில கேள்விகளுக்கு வழிவகுக்கிறது... அதாவது இயற்கையின் அழைப்புகளை (நம்பர் ஒன் மற்றும் நம்பர் டூ) பற்றி!
மனித உடலில் ஏற்படும் விளைவு
விண்வெளியில் வாழும் மனிதர்களின் உடல்நலம் பற்றிய ஏகப்பட்ட சர்ச்சைக்குள் ஏற்கனவே மூழ்கி திளைக்கும் நாசா உஷாராக, ஒரு ஆண்டுக்கு மேல் விண்வெளியில் வாழும் மனித உடலில் ஏற்படும் விளைவு மற்றும் மனித கழிவுப்பொருளைப் பற்றி சில முக்கிய தரவு புள்ளிவிவரங்களை வெளியிட்டது.

அந்த விவரங்களின் படி, கெல்லி விண்வெளியில் கழிக்கப்போகும் ஒரு வருடத்திற்கு மொத்தம் 180 பவுண்டுகள் (அதாவது 82 கிலோகிராம்) மனித கழிவை தயாரிப்பார் என்றும், அந்த கழிவுகள் ஆனது, குறிப்பிட்ட இடைவெளிகளில் வெளியேற்றப்பட்டு, பூமியின் வளிமண்டலத்தில் எரிக்கப்படும். இந்த நிகழ்வானது ஒரு ஏரி நட்சத்திரம் வீழுவது போன்று காட்சி அளிக்கும் என்றும் நாசா விளக்கம் அளித்து இருந்தது. இதுதான் விண்வெளியில் தயாரிக்கப்படும் மனித கழிவுகள் என்னவாகும்? எங்கு போகின்றன? எனும் மாபெரும் சந்தேகத்தை தீர்த்து வைத்த முதல் பதிலாகும்.

கெல்லி உடன் ரஷ்ய விண்வெளி வீரரான மிக்கெயில் கொர்னியென்கோவும் விண்வெளியில் ஒரு வருடம் செலவழித்தனர், அங்கு அவர்களுக்கு, விண்வெளியில் மனித உடலில் ஏற்படும் விளைவுகளை ஆராய நூற்றுக்கணக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், சரி இப்போது மனித கழிவு விடயத்தில் நாசா தலைப்பு செய்தி ஆனது ஏன்? எப்படி? எதனால்? என்பதை பற்றி பார்ப்போம்.

ஒரு கழிப்பறை வெடிப்பு என்பது சமாளிக்க மிகவும் அருவருப்பான விடயம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது பூமியில் நடக்கும் பட்சத்தில் , நீங்கள் ஒரு பிளம்பரை அழைக்க முடியும், ஆனால் அதுவே சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடக்கும்போது? நீங்கள் தான் அதை சுத்தம் செய்ய வேண்டும்.

அப்படியான ஒரு சம்பவம் நடந்து உள்ளதை, ஐஎஸ்எஸ் (சர்வதேச விண்வெளி நிலையம்) மற்றும் நாசாவின் ஆன்லைன் அறிக்கை வெளிப்படுத்தி உள்ளது. அந்த அறிக்கை ஆனது, "சுமார் 1,35,65,05,000 ரூபாய் மதிப்புள்ள கியோடட் கசிந்து, குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வெடிப்பின் விளைவாக கசிந்த இரண்டு கலன் தண்ணீரை வெளியேற்றுவதற்காக விண்வெளி வீரர்கள் துண்டுகளை பயன்படுத்தினார்கள் என்பது தான் உச்சகட்ட கொடுமை!"கசிந்த க்யூடியை மீண்டும் இணைக்க, விண்வெளி வீரர்கள் மிகவும் விரைவாக பணியாற்றினார். மேலும் ஒரு மாற்று க்யூடி ஆனதும் நிறுவப்பட்டது" என்கிறது வெளியான நாசாவின் அறிக்கை.

மேலும் இந்த அறிக்கையின் கீழ்,, ஐஎஸ்எஸ் இந்த கழிப்பறை பயன்பாடு ஆனது பூமியில் இருப்பது போன்ற மிகவும் "நேர்த்தியான மற்றும் அழகான பார்வையை கொண்டு இருக்காது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில், ஐ எஸ் எஸ் கழிப்பறை ஆனது 'ஒரு வட்டமான சில்வர் கேன் மீதுள்ள ஒரு சிறிய தகடு அளவிலான துளை மீது உட்கார்ந்து தான் இயற்கை கடன்களை முடித்துக்கொள்ள வேண்டுமாம், சிறுநீர் என்று வரும் போது ஒரு மஞ்சள் கூம்புக்குள் நுழைக்க வேண்டுமாம்.

நல்லவேளை, ஒரு நகரம் மற்றொரு நகரத்தை குப்பை கிடங்காக பயன்படுத்துவது போன்று, ஒரு சரக்கு விண்வெளி கப்பலில் மூலம் மனித கழிவுகள் பூமி மீது வீசியெறியப்பட்டால், சூழ்நிலையை எப்படி இருந்திருக்கும்? ஐயோ...?

No comments:

Post a Comment

Adbox