"

Wednesday, January 9, 2019

முட்டு வலியை எளிதில் குணமாக்கும் கேரட்டு சூப்

30 வயதிலேயே மூட்டு பிரச்சனைகள் வர ஆரம்பிக்கிறது. இது மூட்டுகளில் மற்றும் எலும்புகளில் உண்டாகும் நாள்பட்ட உட்காயங்களால் முக்கிய காரணம். இதற்கு மோசமான உணவுப் பழக்கம் மற்றும் எலும்புகளுக்கு வேண்டிய சத்துக்கள் முறையாக கிடைக்காமல் இருப்பதும் காரணங்களாகும்.
ஆகவே ஒவ்வொருவரும் தங்களது எலும்புகள் மீது சற்று அதிக அக்கறை காண்பிக்க வேண்டியது அவசியம்.
இந்த பதிவில் எலும்பு மற்றும் மூட்டு வலியாக கஷ்டப்பட்டு வருபவருக்கு  மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இங்கு எலும்புகளில் வலிமையை அதிகரிக்கவும், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கவும் ஓர் அற்புத பானம் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைக் குடித்து வந்தால், எலும்பு மற்றும் மூட்டுகளில் ஏற்படும் கோளாறுகளைத் தடுக்கலாம்.
தேவை:
  • கேரட் – 5-6
  • மிளகு – 1/2 டீஸ்பூன்
  • இஞ்சி – 2 செ.மீ
  • மஞ்சள் கிழங்கு – 1 செ.மீ
செய்யும் முறை:
முதலில் மஞ்சள் மற்றும் இஞ்சியைத் துருவிக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துப் பருக வேண்டும்.
இஞ்சியில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பொருள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, உடலில் கிருமிகளால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும்.
கேரட்டில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்மும் எலும்புகள் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.
எடுக்கும் முறை
இந்த பானத்தை தினமும் மூன்று வேளை பருக வேண்டும். அதுவும் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் 50-60 மிலி பருக வேண்டும். தயாரித்த பானம் ஒருவேளை கெட்டியாக இருந்தால், நீர் சேர்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Adbox