அரசுத் தொடக்க பள்ளிகளில் இனி எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளைத் துவங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் படித்து வரும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள், இனி எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளை இலவசமாக அங்கன்வாடி மையங்களில் கற்க தமிழக அரசு உத்தரவு விட்டுள்ளது. இதனை வரும் 21-ஆம் தேதியன்று முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். வரும் கல்வி ஆண்டு முதல் அதற்கான பாடத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனைத்தொடர்ந்து, தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தினமும் அருகில் உள்ள அங்கன்வாடிகளுக்குச் சென்று சுமார் இரண்டு மணி நேரம் பாடம் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த மாணவர்களுக்கு, நான்கு ஜோடி சீருடை மற்றும் ஒரு ஜோடி காலணிகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இது பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment