உங்கள் உறவினருக்கும் நண்பர்களுக்கும் பணத்தேவை என்றால் நமக்கு ஒன்றிலிருந்து அவர்களுக்கு பணத்தை அனுப்ப வங்கிகளுக்கு சென்று அனுப்ப வேண்டும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பண பரிவர்த்தனையை மூலம் மொபைல் அல்லது லேப்டாப்பில் இருந்து, நாம் நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு அவருடைய வங்கிக் கணக்கிற்கு பண பரிவர்த்தனையை எளிதாக நடைமுறைப்படுத்த முடியும்.
இந்த வங்கி பரிவர்த்தனை எனது நான்கு முறை நடைபெறுகிறது என்று ஐஎம்பிஎஸ்(Imps) மற்றொன்று ஆர் டி ஜி எஸ்(RTGS) நெஃப்ட் (NEFT) மற்றொன்று யுனிஃபைட் பேமன்ஸ் இன்டர்ஃபேஸ் (UPS) என நான்கு முறைகளில் பரிவர்த்தனை நடைபெறுகிறது.
இந்த பரிவர்த்தனை கட்டணம் ஐஎம்பிஎஸ்(Imps) ஆயிரம் ரூபாய் வரை எந்தவித கட்டணமும் கிடையாது. பத்தாயிரம் ரூபாய் வரையிலான பரிமாற்றத்திற்கு ஒரு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பத்தாயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய் முதல் இரண்டு லட்சம் வரை கட்டணம் ரூபாய் 15 இந்த கட்டணத்தோடு கூடுதலாக ஜிஎஸ்டி(GST) இணைகிறது. IMPS சேவை ஆனது 24 மணி நேரமும் வங்கிப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.
ஆர் டி ஜி எஸ் (RTGS) 2 முதல் 5 லட்சம் ரூபாய் வரை 25 ரூபாய் கட்டணமும் 5 ரூபாய்க்கு GST வசூல் செய்யப்படுகிறது. 5 லட்சத்திற்கு மேல் பரிமாற்றக் கட்டணம் ரூபாய் 50 கூடுதலாக ஜிஎஸ்டி ரூபாய் 5. RTGS சேவை ஆனது வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை, சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை பரிவர்த்தனை நடைபெறும்.
நெஃப்ட் (NEFT) பத்தாயிரம் ரூபாய் வரை 2 ரூபாய் 50 பைசாவும் 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ஐந்து ரூபாய். ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை 15 ரூபாயும். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிமாற்றத்திற்கு 25 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இதன் கூடவே கூடுதலாக ஜிஎஸ்டி வரி இணைக்கப்பட்டுள்ளது. வார இறுதிகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை 12 குடியிருப்புகளும், சனிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை பரிவர்த்தனை நடைபெறும்.
VPA (மெய்நிகர் செலுத்தும் முகவரி) ஐப் பயன்படுத்தி எந்த ஸ்மார்ட் ஃபோன்களிலும் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்க UPI- இயக்கப்பட்ட பயன்பாடுகள் அனுமதிக்கின்றன.பரிவர்த்தனைகள் 24/7 செய்யப்படலாம்; பரிமாற்றம் நிகழ் நேர அடிப்படையில் நடக்கிறது. சிறந்தது, வங்கி கணக்கு அல்லது கடன் / பற்று அட்டை எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. UPI- இயக்கப்பட்ட பயன்பாடுகள் ரூ 1 லட்சம் வரை இடமாற்ற அனுமதிக்கின்றன. UPI பண பரிமாற்றம் கட்டணம் இலவசம்.
No comments:
Post a Comment