தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை நாளை ஜனவரி1முதல் அமலுக்கு வருகிறது. அதிக அளவில் பயன்பாட்டில் உள்ள நெகிழி என அழைக்கப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு தமிழக அரசு ஜனவரி 1ம் தேதி முதல் நிரந்தர தடை அமல்படுத்தியுள்ளது.
பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பிளாஸ்டிக் ப தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக்கினால் ஆன தினசரி பயன்பாட்டில் உள்ள 14 பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தடை விதிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம். இந்த பிளாஸ்டிக் கழிவுகள் எளிதில் மக்குவதில்லை. இதனால் மண்ணின் வளம் பாதிக்கப்படுகிறது ஆடு மாடு போன்ற விலங்கினங்கள் உணவு பொருட்களுடன் கூடிய பிளாஸ்டிக் பைகளை உணவாக எடுத்துக் கொள்வதால் உடல் உபாதை மற்றும் மரணத்தை ஏற்படுத்துகிறது.
இன்று முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துள்ளது. இதற்கு பொதுமக்கள், மற்றும் வியாபாரிகள் தரப்பில் வரவேற்பு உள்ள நிலையில் பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக அரசு பல விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வந்தது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்
➤உணவகங்களில், உணவுப் பொருட்களை கட்டுவதற்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்கால் ஆன தெர்மாகோல் தட்டுகள் மற்றும் குவளைகளை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.
➤உள்பக்கம் பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், தண்ணீர் குடிக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குவளைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
➤மேலும், தண்ணீர் பாக்கெட்டுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், உணவை பார்சல் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொட்டலங்கள், கடைகளில் பொருட்கள் வாங்கும்போது இலவச இணைப்பாக தரப்படும் பிளாஸ்டிக் தூக்கு பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
➤இதேபோன்று பிளாஸ்டிக் கொடிகளையும் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் விரிப்புகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுக்களை உபயோகப்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
➤டீக்கடைகளில் தரப்படும் பிளாஸ்டிக் தேநீர் குவளைகள்,இளநீர், குளிர்பானங்களை உறிஞ்சிக் குடிக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உறிஞ்சுக் குழல்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
No comments:
Post a Comment